
இந்தியாவிலுள்ள பாரிய சுதந்திரமான எரிபொருள் மற்றும் எரிவாயு உற்பத்தியாளரும் இலங்கையில் எரிபொருள் அகழ்வு ஆய்வை மேற்கொள்ளும் கெய்ன் லங்கா நிறுவனத்தின் தாய் நிறுவனமான கெய்ன் இந்தியா நிறுவனத்திற்கு 'சுப்பர் பிராண்ட்' என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது.
மங்களா எரிபொருற் படுகையில் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம் இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தியில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்வதும் குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே பிரபல்யமான விளம்பர நிறுவனங்கள், விநியோகிப்பு நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஆகியவற்றாலான சுப்பர் பிராண்ட் சபையினால் கெய்ன் இந்தியா நிறுவனத்திற்கு இந்த அந்தஸ்தை வழங்குவதற்காக தெரிவு செய்துள்ளது.
கடந்த இரண்டு தசாப்த காலங்களில் கெய்ன் இந்தியா நிறுவனம் பாரிய வெற்றிகளை தனதாக்கிக் கொண்டதுடன், 2004ஆம் ஆண்டில் மங்களா மசகு எண்ணெய் படுகையை கண்டு பிடித்தமை, உலகில் நீளமான சூடாக்கல் மற்றும் காப்பிடப்பட்ட குழாய் கட்டமைப்பை அமைத்தல் மற்றும் துரிதமாக மசகு எண்ணெய் படுகைகளை அடையாளம் காணுதல் என்பவையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2011ஆம் ஆண்டு கெய்ன் இந்தியாவின் பதில் நிறுவனமான கெய்ன் லங்கா நிறுவனம் இலங்கையின் மேற்குக் கடற்படுகையில் 30 வருடங்களின் பின்னர் எரிவாயுவை கண்டுபிடித்ததுடன் அது இலங்கையில் முதலாவது ஹைட்ரோகாமபன் கண்டுபிடிப்பு நடவடிக்கையாகவும் அமைந்தது.
இதன்படி இரு எரிபொருள் கிணறுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கை உலகில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ள நாடுகள் வரைபடத்தில் இடம்பிடித்துள்ளது.
அத்தோடு கெய்ன் லங்கா நிறுவனம் இந்த ஆய்வால் பெறப்படும் எரிபொருட்களை வர்த்தகமயமாக்குவதற்கு இலங்கை அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றது.
இலங்கையிலுள்ள மாணவர்களது அறிவை மேம்படுத்துவதற்காக கெய்ன் லங்கா நிறுவனம் 2011 ஆம் ஆண்டு ஜனாதிபதி அலுவலகத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதுடன் அதனூடாக மொனராகலை மாவட்டத்திலுள்ள 27 பின்தங்கிய பாடசாலைகளுக்கு புத்தகசாலை வசதிகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சுப்பர் பிராண்ட் எண்ணக்கருவானது பிரிட்டனில் இருந்து ஆரம்பமாகி 86 நாடுகளில் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் வணிகத் துறையில் மட்டுமன்றி சமூகத்திற்குள்ளும் சிறந்த மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு உதவியாகவுள்ள நிறுவனங்களும் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும்.
.jpg)