2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கை முதலீட்டு சபையுடன் ஜப்பானின் வங்கி உடன்படிக்கை கைச்சாத்து

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய முதலீடுகளை நாட்டில் ஊக்குவிக்கும் வகையில் பாங்க் ஒஃவ் டோக்கியோ மிட்சுபிஷி, இலங்கை முதலீட்டு சபையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. ஜப்பானில் 764 கிளைகளை கொண்டுள்ள இந்த வங்கி, 75 வெளிநாட்டு அலுவலகங்களையும் கொண்டுள்ளது. 
 
இலங்கையில் அதிகளவு முதலீட்டு வாய்ப்புகள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு இலங்கை ஒரு கவர்ச்சிகரமான நாடாக அமைந்துள்ளதாகவும், ஜப்பானியர்களின் முதலீடுகளை இலங்கையில் ஊக்குவிக்கும் முகமாக தாம் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ஆசியா மற்றும் ஓசனியா பிராந்தியங்களுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி கோ வடநாபே தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X