2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சொஃப்ட்லொஜிக் பினான்ஸ் நிறுவனத்தின் தொகுதிக்கடன் வழங்கல் ஆரம்பம்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


சொஃப்ட்லொஜிக் பினான்ஸ் பிஎல்சி நிறுவனமானது ரூ.1.4பில்லியனுக்கு தொகுதிக்கடன் பத்திரங்கள் வழங்கலை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது. RAM ரேட்டிங் (லங்கா) லிமிடெட் மூலம் AAA தரப்படுத்தலை பெற்ற 14,000,000 மீட்கக்கூடிய (redeemable) தொகுதிக்கடன்கள், உத்தரவாதமளிக்கப்பட்ட தொகுதிக்கடன் பத்திரங்கள் ஒவ்வொன்றும் ரூ.100 பெறுமதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், கொழும்பு பங்கு பரிவர்த்தனையிடமிருந்து முதன்மை ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்த தொகுதிக்கடன் பத்திரங்கள் வழங்கல் 2014 ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு பங்கு பரிவர்த்தனையுடன் பதிவு செய்யப்பட்ட அனைத்து பங்கு தரகர்களுக்கு மேலதிகமாக, அனைத்து சொஃப்ட்லொஜிக் பினான்ஸ் கிளைகளிலும் தகவல் அறிக்கைகள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
 
சொஃப்ட்லொஜிக் பினான்ஸ் நிறுவனத்தின் தொகுதிக்கடன் வழங்கலானது இந்த தொகுதிக்கடன் பத்திரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் கரன்ட்கோ உடன் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கரன்ட்கோ ஆனது அதன் கட்டமைப்பில் ஓர் அங்கமாக பர்க்லைஸ் வங்கியின் உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது. ஐந்தாண்டு கால எல்லையை கொண்ட(2014/2019) இந்த வழங்கல் கவர்ச்சிகரமான நிலையான மற்றும் நிலையற்ற வட்டி விகிதங்களுடன் காலாண்டு அடிப்படையில் வழங்குகிறது. இரு தெரிவுகளாவன: தெரிவு ஏ – நிலையான 10% வட்டி விகிதம் காலாண்டு 10.38% AER என்ற அடிப்படையில் செலுத்தப்படும் அல்லது தெரிவு பி - நிலையற்ற மூன்று மாதங்களுக்கான தேசிய திறைசேரி உண்டியல் வட்டி விகிதம் + 1.5% என்ற அடிப்படையில் காலாண்டில் செலுத்தப்படும். இந்த பரிமாற்றமானது மிகச்சிறந்த நிகழ்வாக பலராலும் கருதப்படுவது, இந்த வழங்கலுக்கு AAA தரப்படுத்தல் கிடைக்கப்பெற்றதன் விளைவாக மற்றுமின்றி, தேசத்தின் கடன் மூலதன சந்தையை அபிவிருத்தி செய்வதற்கு மாற்று தீர்வுகளை வழங்குவதற்கு மேலதிக வெளிநாட்டு பங்களிப்புக்கான வழியமைத்ததற்காகவுமாகும்.
 
கரன்ட்கோ ஆனது PIDG நம்பிக்கை ஊடாக PIDG அங்கத்தவர்களுக்கும் மற்றும் FMO ஊடாக DGIS இற்கும் சொந்தமானது. பல் கொடை, அங்கத்தவர் மேலாண்மை அமைப்பான தனியார் உள்கட்டுமான அபிவிருத்தி குழுமத்திடமிருந்து (PIDG) கரன்ட்கோவின் கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஐக்கிய இராட்சியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் ('DFID'), பொருளாதார விவகாரங்களுக்கான சுவிஸ் அரச செயலகம் ('SECO'), பொருளாதார விவகாரங்களுக்கான நெதர்லாந்து அமைச்சு ('DGIS'), சுவீடன் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவர் நிலையம் ('Sida'), உலக வங்கி, அவுஸ்திரேலிய அபிவிருத்தி முகவர் நிலையம் ADA”), Irish Aid, Kreditanstalt für Wiederaufbau("KfW") மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அவுஸ்திரேலியன் நிறுவனம் (AusAid) ஆகியன தற்போதைய PIDG இன் உறுப்புரிமையை கொண்டுள்ளன.
 
இலங்கை போன்ற வளரும் சந்தைகளில் நிதி தேவைகளை பொறுப்பெடுக்கும் ஐக்கிய இராட்சியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் ஆனது இந்த பரிமாற்றங்களை பாதுகாப்பதற்காக குற்றமற்ற செயற்பாட்டு நியமங்களையும் சிறந்த சர்வதேச நடைமுறைகளையும் கடைபிடிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளதன் அடிப்படையில், அதன் நற்சான்றுகளை நிறுவியுள்ளமை குறித்து சொஃப்ட்லொஜிக் பினான்ஸ் மிகவும் மகிச்சியடைகின்றது. சொஃப்ட்லொஜிக் நிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர துறை குறித்த விசேட அறிவு மற்றும் அனுபவத்தை கொண்டுள்ளது. இந்த நிதியிடல் மூலம் நிதிசார் வழிகாட்டல்கள், வியாபாரங்கள் மற்றும் தங்களது வாழ்க்கைத் நிலைகளை கட்டியெழுப்ப விரும்பும் வாடிக்கையாளர்களுடனான உறவை விருத்தி செய்ய பயன்படுகிறது.
 
சொஃப்ட்லொஜிக் பினான்ஸ் பிஎல்சி ஆனது, சுகாதார பராமரிப்பு, சில்லறை, நிதிசார் சேவைகள், ICT, பொழுதுபோக்கு, மோட்டார் வாகனங்கள் மற்றும் உணவகங்கள் ஆகிய துறைகள் மீது கவனம் செலுத்தி வருகின்ற சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் ஒரு அங்கத்துவ நிறுவனமாகும். இந் நிறுவனமானது 2011 ஆம் ஆண்டு 42ஆம் இலக்க நிதி வியாபார சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விசேட நிதி நிறுவனமாகும். மேலும் 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதி குத்தகை சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் ஒப்புதலை பெற்ற சிறப்பு லீசிங் நிறுவனமாகவும் உள்ளது. இந் நிறுவனமானது லீசிங் மற்றும் வாடகை கொள்வனவு, நிலையான வைப்புகள் மற்றும் சேமிப்புகள், தனிநபர் கடன்கள், வியாபார கடன்கள், ஆபரண கடன்கள் மற்றும் SME கடன்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X