
தமது பெருமைக்குரிய வாடிக்கையாளர்களுக்கான வெற்றி வாய்ப்புக்களை அதிகரிக்கும் நோக்கில், 'தீவா காணி அதிர்ஷ்டம்' மேலுமொரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பை அண்மித்து பெறுமதியான காணிகளை வழங்குவதற்காக தீவா ஆரம்பித்த 'தீவா காணி அதிர்ஷ்டம்' ஊக்குவிப்பு திட்டத்தை மேலுமொரு மாதத்திற்கு நீடிக்க ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
வாடிக்கையாளரிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பு காரணமாகவே இத் திட்டத்தினை மேலுமொரு மாதத்திற்கு நீடிக்கக் காரணம் என தீவா குழுவினர் அறிவித்துள்ளனர். அதற்கமைய, ஜூலை 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த இந்த போட்டியானது ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் வழக்கம் போல நாளாந்தம் 10,000 ரூபாவும், வாராந்தம் தங்க நாணயங்களும் வெகுமதியாக வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து 3 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஊக்குவிப்பு திட்டம், இம்முறை நான்காவது ஆண்டாக முன்னெடுக்கப்படுகிறது. காணியை வென்ற முதலாவது மற்றும் இரண்டாவது வெற்றியாளர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இன்னும் மூன்று வெற்றி வாய்ப்புக்கள் வாடிக்கையாளர் வசம் காணப்படுகிறது. முதல் மாதத்தில் கிடைத்த கூப்பன்களிலிருந்து காணியை வெல்லும் முதலாவது வெற்றியாளராக பரணகம உடுபத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த நிசந்தா வீரசிங்க தெரிவு செய்யப்பட்டதுடன், பெரலபனந்தர பிரதேசத்தில் வசிக்கும் சமீர சம்பத் காணியை வென்ற இரண்டாவது அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தன் மனைவி மற்றும் தாயுடன் பெரலபனந்தர பிரதேசத்தில் வசிக்கும் சமீர சம்பத் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் பணியாற்றுகிறார். தனது வெற்றி குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 'எனக்குச் சொந்தமான வீடொன்றை அமைக்கும் கனவினை நனவாக்கிக் கொள்ள தீவா உதவியுள்ளது. 'காணி ஒன்றினை கொள்வனவு செய்து வீடொன்றை கட்டுவதே எமது கனவாக இருந்ததுடன், அக் கனவினை நனவாக்கிக் கொள்வதற்கான வழியை தீவா ஏற்படுத்திக் கொடுத்துள்ளது' என தெரிவித்தார்.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவா ட்ரிபல் அக்ஷன் குறியீட்டுடன் சந்தையில் காணப்படும் 03 தீவா சஷே வெற்று பக்கெட் (35g, 70g அல்லது 250g) அல்லது வேறெந்த பக்கற்றிலிருந்தும் (400g, 1kg, 2kg) ஒரு மேலுறை வீதம் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு 'தீவா காணி அதிர்ஷ்டம்' த.பெ.இல. 1289, கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். மேலும் போட்டியில் வெற்றி வாய்ப்புக்களை அதிகரிக்கும் நோக்கில், சைக்கிள் அணியினர் கிராமத்திற்கு கிராமம், நகரத்திற்கு நகரம் பயணித்து 'தீவா காணி அதிர்ஷ்டம்' இனை இல்லத்தரசிகளின் வீட்டிற்கே கொண்டு செல்கின்றனர். இதன் போது கொள்வனவு செய்யும் தீவா பக்கற்றுடன் கிடைக்கும் கூப்பனை நிரப்பி அவ்விடத்திலேயே ஊக்குவிப்பு அணியினருக்கு கையளிக்க முடிவதுடன், வெற்று பக்கற்றினை பின்னர் தபால் மூலம் அனுப்பி வைப்பதற்கு முடியும். கார்கீல்ஸ் வலையமைப்பினூடாக தீவாவை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இரு வெற்றி வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. அப்போது பற்றுச்சீட்டுடன் கிடைக்கும் கூப்பனை நிரப்பி போட்டியில் கலந்து கொள்ள முடிவதுடன், வெற்றுப் பக்கற்றினை தபால் மூலம் அனுப்புவதன் ஊடாகவும் பங்கேற்க முடியும்.
மேலும் காணி வெற்றியாளர்களை தவிர்ந்து, மேலும் பல வெற்றியாளர்களை உருவாக்கும் நோக்கில் நாளாந்தம் 10,000 ரூபா மற்றும் வாராந்தம் தங்க நாணயங்களை தமது வாடிக்கையாளருக்கு வழங்கும் நடவடிக்கைகளை தீவா முன்னெடுத்துள்ளது.