2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அமானா வங்கியின் சேமிப்புத் திட்டம்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமானா வங்கி அண்மையில் அதன் சேமிப்பு திட்ட கணக்கு முறையை அறிமுகம் செய்தது. இத்திட்டமானது வாடிக்கையாளர்கள் விரும்பும் ஒரு காலப் பகுதிக்குள், இலக்கு வைக்கும் ஒரு சேமிப்புத் தொகையை அடைந்துக்கொள்வதற்கு துணைபுரியும் பிரத்தியேகமான ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது எதிர்காலத்திற்காக திட்டமிட்ட வகையில் சேமிப்பு தொகையை அடைந்துக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு துணை புரிவதோடு வாடிக்கையாளர்கள் இலக்கு வைக்கும் சேமிப்புத் தொகைக்கு இணையான இலவச ஆயுள் தக்காபுல் காப்புறுதியையும் (அதிகபட்சம் 1 மில்லியன்), உயர் இலாபப் பகிர்வையும் வழங்குகின்றது.
 
இது குறித்து கருத்து வெளியிட்ட வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர் அவர்கள் ' உங்கள் பிள்ளைகளின்; உயர் கல்வி நடவடிக்கைகள், திருமணம் அல்லது வேறு ஏதாவது நிதித் தேவைகளுக்காக இந்த சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இங்கு வழங்கப்படும் இலவச தக்காபுல் காப்புறுதி உங்கள் சேமிப்பு இலக்கு தொகையை அடைவதை உறுதிப்படுத்தும். அதாவது கணக்குரிமையாளர்களுக்கு விபத்து/ மரணம் காரணமாக திட்டமிட்ட சேமிப்புத் தொகையை அடையமுடியாவிடின் அந்தத் தொகையை (அதிகபட்சம் 1 மில்லியன்) தக்காபுல் மூலம் கணக்குரிமையாளர் அல்லது அவர்களால் பரிந்துரைக்கப்படுபவர்கள் காப்புறுதித் தொகையாக பெற்றுக்கொள்வதோடு கணக்கில் உள்ள திரள் நிலுவையையும் பெற்றுக்கொள்வார்.' என்று குறிப்பிட்டார்.
 
இந்த புதிய கணக்கு தொடர்பில் தனது கருத்தை பகிர்ந்து கொண்ட வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவிற்கான துணைத் தலைவர் சித்தீக் அக்பர் அவர்கள் ' வாடிக்கையாளர்கள் பல்வேறு விருப்பத் தெரிவுகளில் இருந்து தாம் இலக்கு வைக்கும் தொகையையும், சேமிப்புத் தொகையை அடைந்து கொள்வதற்கான காலப் பகுதியையும் தெரிவு செய்ய முடிவதால், இந்த சேமிப்புத் திட்டம் அவர்களுக்கு மிகவும் சௌகரியமாக அமையும் அதேவேளை தமது எதிர்பார்ப்புக்களை திட்டமிட்டு நிறைவேற்றிக் கொள்வதற்கு இது ஓர் சிறந்த திட்டமாக விளங்கும்' என்றார்.
 
18 வயதிற்கு மேற்பட்ட தனி விண்ணப்பதாரிகள் இந்த சேமிப்புத் திட்டத்;தின் மூலம் பயன் அடையலாம். குறைந்தபட்ச சேமிப்பு தொகை 100,000 ரூபா மற்றும் அதிகபட்ச தொகை 5,000,000 ரூபாவினை 1 வருடத்திலிருந்து 5 வருடம் வரை சேமிக்கலாம். சேமிப்புத் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0117 756 756 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது நாடெங்கும் பரந்திருக்கும் 24 கிளைகளில் ஒன்றிற்கு விஜயம் செய்யுங்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X