2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காலியில் எம்.டி.குணசேன

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 03 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்னணி புத்தக வெளியீட்டாளரும், பதிப்பாளரும் விற்பனையாளருமான எம்.டி.குணசேன தனது 17 ஆவது கிளையை காலியில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக காலி மாநகர சபையின் நகர பிதா மெத்சிரி டி சில்வா, நிறுவனத்தின் தலைவர் பேர்சி குணசேன, முகாமைத்துவ பணிப்பாளர் ஆனந்த குணசேன மற்றும் பதில் முகாமைத்துவ பணிப்பாளர் ரஜீவ் குணசேன ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இரு மாடிகளில் நவீன வசதிகளை கொண்ட இந்த புதிய புத்தகசாலை 2500 சதுர அடி பரப்பில் புதிய உட்கட்டமைப்பு வடிவமைப்புடன் அமைந்துள்ளது.
 
இந்த புதிய காட்சியறை, இல. 02, மாத்தறை வீதி, காலி எனும் முகவரியில் அமைந்துள்ளது. உள்நாட்டு புத்தக ஆர்வலர்களுக்கு பல்வேறு வகையான புத்தக, காகிதாதிகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் தெரிவுகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வின் போது புதிதாக மெருகேற்றம் செய்யப்பட்ட எம்டி குணசேன புத்தகசாலையின் www.mdgunasena.com என்பதும் அனைவரின் கவனத்தை ஈர்த்திருந்தது. 
 
எம் டி குணசேன புத்தகசாலையின் பதில் முகாமைத்துவ பணிப்பாளர் ரஜீவ் குணசேன கருத்து தெரிவிக்கையில், 'நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலமாக செயலாற்றிய அனுபவத்தை கொண்டுள்ள நாம், தேசத்துக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதில் அதிகளவு பங்களிப்பை வங்கியுள்ளோம். எமது புதிய அத்தியாயத்துடன் இணைந்து கொள்ளுமாறு புத்தக ஆர்வலர்களை நாம் அழைக்கிறோம். எமது நிறுவனம் புத்தக வெளியீட்டு துறையில் முன்னிலையில் திகழ்கிறது. மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாம் துரிதமாக எமது செயற்பாடுகளையும் மாற்றி வருகிறோம். காலி புத்தகசாலையின் அங்குரார்ப்பணத்துடன், இந்த பெறுமதி சேர்க்கும் செயற்பாட்டுக்கு மேலும் பெறுமதி சேர்க்கப்பட்டுள்ளது' என்றார்.
 
1913 ஆம் ஆண்டு எம் டி குணசேன தாபிக்கப்பட்டது முதல், இலங்கையின் மிகவும் பிரபல்யமான புத்தக வெளியீட்டாளராக திகழ்கிறது. நாடு முழுவதும் 17 விற்பனையகங்களை கொண்டுள்ளது. சுமார் நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டுள்ள இந்நிறுவனம், புத்தக வெளியீட்டு துறையில் முன்னோடியாக திகழ்கிறது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X