
செலான் 'டிக்கிரி பொல' (Tikiri Pola) முன்னெடுப்பானது கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சர்வதேச சிறுவர் தினத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதிலிருந்து நாடு முழுவதிலுமுள்ள 5000 இற்கும் அதிகமான முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலை சிறுவர்;களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவர்களது நடத்தை மற்றும் சிந்தனை போன்ற விடயங்களில் மாற்றமொன்றை உருவாக்கியுள்ளது.
தொழில் முயற்சியாண்மையின் மகிழ்ச்சியை அது அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருப்பது மட்டுமன்றி, சேமிப்புப் பழக்கத்தின் முக்கியத்தும் தொடர்பாகவும் படிப்படியாக அறிவுறுத்தி இருக்கின்றது. இதற்கு இன்னுமொரு படி மேலே சென்று, இந்த சின்னஞ் சிறார்கள் மத்தியிலும் அதேபோல் பாடசாலை மற்றும் உள்ள10ர் சமூகத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியிலும் கடைப்பிடிக்கப்படும் வாழ்க்கைமுறை போக்கிற்குள் உள்ளடங்கும் விதத்தில் மேற்படி இரு கருத்திட்டங்களும் இந்த செயற்றிட்டத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
பராம்பரிய கிராமங்களில் அமைக்கப்படும் 'பொல' (சந்தை) இன் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புதுமையான கருத்திட்டமாக செலான் 'டிக்கிரி பொல' காணப்படுகின்றது.
'இலங்கை சிறுவர்களுக்கு சேமிப்புப் பழக்கத்தில் ஒரு உறுதிமிக்க அடித்தளத்தை இடுவதே எமது நோக்கமாகும். சேமிப்பின் முக்கியத்துவம் தொடர்பில் சிறுவயதிலேயே சிறுவர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்று நாம் நம்புகின்றோம். அவ்வாறு இருந்தால் மட்டுமே அதற்குப் பின்னர் வரும் வருடங்களில் அவர்களால் நிதி அடிப்படையில் சௌகரியமான நிலையில் வாழ முடியும். இதற்கு மேலதிகமாக, அவர்களது வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளத்தை கட்டமைக்கக் கூடிய தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை திறன்களையும் நாம் வழங்குகின்றோம். செலான் 'டிக்கிரி பொல' முன்னெடுப்பின் மூலம் 5000 இற்கும் அதிகமான சின்னஞ் சிறார்களின் வாழ்க்கையை மட்டுமன்றி அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஏனைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையையும் தொட்டுள்ளோம். இதுவே எமது மிகத் தெளிவான இலக்காகும்' என்று செலான் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) திரு. டிலான் விஜயசேகர தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டிலிருந்து செலான் டிக்கிரி பொல நிகழ்வுகள் - அவிசாவளை, அகலவத்தை, பொகவந்தலாவை, மட்டக்களப்பு, சாவகச்சேரி, தெபரவேவ, எம்பிலிப்பிட்டிய, காலி, யாழ்ப்பாணம், கம்புறுப்பிட்டிய, கிளிநொச்சி, நெல்லியடி, பெல்மதுளை, றுவன்வெல்ல, றைகம, திஸ்ஸமஹாராம, பதுளை, வலஸ்முல்லை, பண்டாரகம, மாத்தறை, மாவத்தகம, கிராண்ட்பாஸ், அம்பலாந்தோட்டை, மதுகம, வெலிமட போன்ற நாடு முழுவதிலும் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்றிருக்கின்றது.
'இந்த முன்னெடுப்பானது மிகச் சிறந்த வெற்றியை பெற்றிருப்பதுடன் முற்றுமுழுதான உள்ள10ர் சமூகத்தின் கவனத்தையும் தனது பக்கம் கவர்ந்திழுத்திருக்கின்றது. மேலும் பல சிறுவர்களின் வாழக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் முகமாக, மேலும் அதிகமான கிராமிய பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு இந்த செயற்றிட்டத்தை கொண்டு செல்வதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். இதனை முன்னின்று நடைமுறைப்படுத்துவதையிட்டும், சிறப்பான நாளைய தினத்திற்காகவும் முழு நாட்டுக்காகவும் சேமிப்புடன் தொடர்புடைய எதிர்கால இளைய தலைமுறை ஒன்றை உருவாக்குவதையிட்டும் நாம் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றோம்' என்று திரு. டிலான் விஜயசேகர கூறி முடித்தார்.
