2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வத்தளையில் சம்சங்கின் புதிய டிஜிட்டல் பிளாசா

Thipaan   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


டிஜிட்டல் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான சம்சங் எலக்ட்ரோனிக்ஸ்,  சம்சங் டிஜிட்டல் பிளாசா (Samsung Digital Plaza) வை, வத்தளையில் நேற்று(03) அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளதன் ஊடாக, அதன் வலையமைப்பை இலங்கையில் மேலும் விசாலமாக்குகின்றது.

துரித அபிவிருத்தியடைந்து வரும் வத்தளை நகரில், முதன்மையாக ஆரம்பிக்கப்படும் இந்த பிளாசா ஆனது, சம்சங்கின் புத்தமைவு நுகர்வோருக்கான தயாரிப்புகளை காட்சிப்படுத்தும்.

வத்தளை சம்சங் டிஜிட்டல் பிளாசா ஆனது, இலங்கையின் முன்னணி குழுமமான சொஃப்ட்லொஜிக் ரீட்டெயில் லிமிடட் உடனான ஒருங்கிணைவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிளாசா தொகுதியின் மாபெரும் திறப்புவிழா வைபவத்தில் சம்சங் இந்தியா எலக்ட்ரோனிக்ஸ் இலங்கைக் கிளைக்கான முகாமைத்துவ பணிப்பாளர்H.K. ச்சேங், சொஃப்ட்லொஜிக் ரீட்டெயில் பிரதம நிறைவேற்று அதிகாரி நசர் மஜீட், சொஃப்ட்லொஜிக் ரீட்டெயில் வர்த்தகப் பணிப்பாளர் பி. நிர்மலன் ஆகியோர் உள்ளிட்ட   சொஃப்ட்லொஜிக் மற்றும் சம்சங் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த புதிய பிளாசா குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்ட சம்சங் இந்தியா எலக்ட்ரோனிக்ஸ் இலங்கைக் கிளைக்கான முகாமைத்துவ பணிப்பாளர் H.K. ச்சேங்,

'இந்த புதிய டிஜிட்டல் பிளாசா ஆனது, இலங்கையில் எமது இருப்பை மேலும் பலப்படுத்தும். இதன் அங்குரார்ப்பணத்துடன், வத்தளையிலுள்ளவர்களுக்கு பரந்தளவான, புத்தமைவு சம்சங் தயாரிப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவை அனுபவத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Curved UHD  தொலைக்காட்சிகள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள், ஸ்மார்ட் குளிர்சாதனப்பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மைக்கிரோவேவ்' கையடக்கத் தொலைபேசி மற்றும்  புகைப்படக் கருவி சாதனங்கள் உள்ளிட்ட சம்சங்கின் பல்வகை அதி நவீன தயாரிப்புகளை பிளாசா காட்சியறையில் பெற்றுக்கொள்ளலாம்.

வத்தளையில் அமைந்துள்ள இந்த புதிய பிளாசாவானது, வாடிக்கையாளர்கள் சிறந்த உலகம் ஒன்றை பெற்றுக்கொள்ளவும் சிறப்பான அனுபவத்தை பெறும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள சம்சங்கின் புதிய தரம்மிக்க தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் என்றார்.
புத்தமைவு தயாரிப்புகளை அளிப்பதற்காகவும், அடுத்த தலைமுறை டிஜிட்டல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சாதனங்களை அளிக்கும் முதல்வனாகவும் சம்சங் விளங்குகின்றது.

இந்த நிறுவுனமானது மொபைல், தொலைக்காட்சி, ஓடியோ சாதனங்கள், ஹோம் தியேட்டர்கள், வீட்டு உபகரணப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் சாதனங்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றது.

இந்த புதிய பிளாசா ஆனர் இல. 165, நீர்கொழும்பு வீதி, வத்தளை என்ற முகவரியில் அமைந்துள்ளதுடன், வாரத்தின் அனைத்து நாட்களும் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும்.

இந்த புதிய காட்சியறை  குறித்த மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள சம்சங் அலலது சொஃப்ட்லொஜிக்குக்கு, சம்சங் ஹொட்லைன் ஆன 011 7540 540  ஊடாக அல்லது சொஃப்ட்லொஜிக் ஹொட்லைன் ஆன 011 5705 705 ஊடாக அழையுங்கள் .

Image 01  - சொஃப்ட்லொஜிக் ரீட்டெயில் பிரதம நிறைவேற்று அதிகாரி நசர் மஜீட், சம்சங் இந்தியா எலக்ட்ரோனிக்ஸ் இலங்கைக் கிளைக்கான முகாமைத்துவ பணிப்பாளர் ர்.மு. ச்சேங் மற்றும் சொஃப்ட்லொஜிக் ரீட்டெயில் வர்த்தகப் பணிப்பாளர் பி. நிர்மலன் ஆகியோர் வத்தளையில் புதிய சம்சங் டிஜிடல் பிளாசாவை சம்பிரதாய புர்வமாக நாடாவை வெட்டி திறந்து வைக்கின்றனர்.

Image 02 - வத்தளையில் அமைன்துள்ள புதிய சம்சங் டிஜிடல் பிளாசா

சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் கொ., லிமிடட் பற்றி

சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் கொ., லிமிடட் தொழினுட்ப சந்தையில் சர்வதேச ரீதியில்; செமிகொண்டக்டர்கள், தொலைத்தொடர்பாடல், டிஜிட்டல் ஊடகம், டிஜிட்டல் ஒருங்கிணைப்புகள் போன்ற தயாரிப்புகளில் முதன்மையாக திகழ்வதுடன், 2010ம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட விற்பனையாக 135.8 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஈட்டியுள்ளது.

68க்;கும் மேற்பட்ட நாடுகளில், 190இ500 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளதுடன், 206 அலுவலகங்களையும் கொண்டுள்ள நிறுவனமானது, எட்டு சுயாதீனமாக செயற்படும் வர்த்தக பிரிவுகளையும் கொண்டுள்ளது.

அவையாவன விஷுவல் டிஸ்ப்ளே, மொபைல் தொடர்பாடல்கள், தொலைத்தொடர்பாடல் கட்டமைப்பு, டிஜிட்டல் சாதனங்கள், தகவல் தொழில்நுட்ப தீர்வுகள்,  டிஜிட்டல் இமேஜிங், செமிகொண்டக்டர் மற்றும் LCD  ஆகியனவாகும்.

சம்சங் எலக்ட்றோனிக்ஸ்ஸானது, டிஜிடல் தொலைக்காட்சிகள், செமிகொண்டக்டர் சிப்கள், மொபைல் தொலைபேசிகள் மற்றும் TFT-LCD  கள் ஆகியவற்றை அளிக்கும் உலகில் மிகத்துரித வளர்ச்சியடைந்து வரும் சர்வதேச வர்த்தக நாமமாக விளங்குகின்றது.

இதுகுறித்த மேலதிக விபரங்களை www.samsung.com. என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ளலாம்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X