2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வங்கிச் சேவை நேரத்தை விரிவுபடுத்தியுள்ள அமானா வங்கி

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த வருடம் தமது வாடிக்கையாளர் சௌகரியத்திற்காக வங்கிச் சேவைக் காலத்தை அதிகரித்த அமானா வங்கி, இந்த சேவையை மேலும் 5 கிளைகளுக்கு விஸ்தரித்துள்ளது. 
 
இதற்கமைய, செப்டெம்பர் 1ம் திகதி முதல் அமானா வங்கியின் மகளிர் பிரிவு (கொழும்பு 03), கிண்ணியா, புத்தளம், நீர்கொழும்பு மற்றும் பதுளை கிளைகள் வார நாட்களில் வர்த்தக கொடுக்கல் வாங்களுக்காக மாலை 4.00 மணி வரை திறக்கப்பட்டிருக்கும், மேலும் கொழும்பு 3, தெஹிவளை, கண்டி, காத்தான்குடி ஆகிய கிளைகளில் இந்த சேவை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புறக்கோட்டைக் கிளை மாலை 6.00 மணி வரை வங்கிச் சேவையை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த முன்னெடுப்பு குறித்து கருத்து வெளியிட்ட வங்கியின் தொழிற்பாட்டு மற்றும் வர்த்தக உதவிப் பிரிவின் துணைத் தலைவர் திரு. எம்.எம்.எஸ். குவிலித் அவர்கள் ' ஆரம்பத்தில் வங்கிச் சேவைக் காலத்தை அதிகரித்ததன் மூலம் பல வாடிக்கையாளர்கள் பயன் அடைந்ததை நாம் கண்டு கொண்டோம். அதனால், மேலும் சில கிளைகளிலும் வங்கிச் சேவைக் காலத்தை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான சேவையை வழங்க முன்னெடுத்துள்ளோம்' என்று குறிப்பிட்டார். 
 
வட்டி சாராத இஸ்லாமிய வங்கிக் முறையுடன் முற்றிலும் இணங்கி செயற்படும் இலங்கையின் முதலாவது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியே அமானா வங்கியாகும். தனது மூலோபாய பங்காளிகளான மலேஷpயா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு,  நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X