2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

டுபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களில் இலங்கை தேயிலை ஊக்குவிப்பு திட்டம்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 17 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு மற்றும் கல்ஃப் பிராந்தியத்துக்கான இலங்கை தேயிலை ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக டுபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையில் பாரிய இருபது காட்சிப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
 
லண்டன் விமான நிலையத்தை தொடர்ந்து, உலகின் சிறந்த விமான நிலையமாக தரப்படுத்தப்பட்டுள்ள டுபாய் சர்வதேச விமான நிலையம், கடந்த ஆண்டில் சுமார் 67 மில்லியன் மக்களை கையாண்டிருந்தது.
 
ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிசெம்பர் 31ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலப்பகுதிக்கு காட்சிப்படுத்தப்படும் வகையில் டுபாய் விமான நிலையத்தின் 3ஆம் டேர்மினல் பகுதியில் காட்சிப் பதாதைகள் நிறுவப்பட்டுள்ளன. அதுபோல ஷார்ஜா விமான நிலையத்தின் உள்வருகை மற்றும் வெளிச்செல்லும் பகுதிகளில் பன்னிரெண்டு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X