
இலங்கையின் முன்னணி வணிக நோக்கிலான வனவியல் நிறுவனமான சதாஹரித பிளாண்டேஷன் மற்றும் அதன் புகழ்பெற்ற நிலையான மேலாண்மையானது, உயர் மதிப்பான அகர்வுட்டினை தேடி கண்மூடித்தனமாக மரங்களை வெட்டுதல் மற்றும் காடுகளை அழிப்பதன் காரணமாக நாட்டின் இயற்கை வாழ்விடங்கள் மோசமான பின்விளைவுகளை சந்தித்திருப்பதாக எச்சரித்துள்ளது.
ஆசியாவை பூர்வீகமாக கொண்ட எகியுலேரியா மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அகர்வுட் தனித்தன்மையான நறுமணத்தை கொண்டுள்ளது. அவை பாரம்பரிய மருந்துகள், உலக தரமான வாசனைத் திரவியங்கள், தூபங்கள், அரோமா சிகிச்சைகள், அழகுசாதன பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
உள்நாட்டில் பொதுவாக 'வல்லப்பட்டை' என அறியப்படும் 'கிறினோப்ஸ் வல்லா' ஆனது, வணிக ரீதியாக கிடைக்கும் அகர்வுட்டினை ஒத்திருப்பதால் வல்லப்பட்டையில் உருவாகும் பிசின் மிக பெறுமதி வாய்ந்ததாக கருதப்பட்டது. இலங்கையில் ஈரலிப்பான மற்றும் இடைவெப்ப வலயங்களில் வல்லப்பட்டை மரங்கள் வளர்கின்றன. அகர்வுட்டிற்கான கேள்வி உலக அரங்கில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதனால், இவ்வகையான மரங்களை வெட்டுதல் மற்றும் சட்டரீதியற்ற வகையில் அறுவடை செய்யப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இந்த மரங்களில் ஆகக்குறைந்த(1-2%) அகவுட் உற்பத்தி செய்யப்படுகிறது. பல தசாப்தங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் முதலீடுகள் ஊடாக அகர்வுட் அறுவடை தொடர்பிலான வணிக மற்றும் பொருளாதார ரீதியான இயல்புகளை சதாஹரித நன்குணர்ந்துள்ளது.
'வணிக ரீதியான அகர்வுட் உற்பத்திக்கு இலங்கையில் CA Kit ஊடாக மாத்திரமே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இந்த முறைக்கான பிரத்தியேக காப்புரிமையை இலங்கையில் சதாஹரித பிளாண்டேஷன் மட்டுமே கொண்டுள்ளது' என சதாஹரிதவின் முகாமைத்துவ பணிப்பாளர் சதீஷ் நவரத்ன தெரிவித்தார். சதாஹரித மூலம் விற்கப்படும் மற்றும் விநியோகிக்கப்படும் 'எகியுலேரியா கரஸ்னா' மரங்களிலிருந்து 60 - 80% வீதமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும். பெரியளவில் பயிர் செய்யும் விவசாயிகள் முதல் வீட்டுத்தோட்டத்திலேயே வளர்க்கக்கூடிய இல்லத்தரசிகள் வரையான அனைவருக்கும் இம்மரங்கள் சிறந்த முதலீடாக அமைந்துள்ளன.
ஆராய்ச்சி தரவுகளின் படி இயற்கையான வல்லப்பட்டையில் உள்ள அகர்வுட்டானது இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிடுகின்றன. இந் நிலைமையானது, சட்ட விரோதமாக அகர்வுட்டினை அறுவடை செய்யும் முகமாக நாட்டின் இயற்கை வனங்கள் மற்றும் வாழ்விடங்களை அழித்து சட்ட விரோதமான லாபம் சம்பாதிக்கவும், மோசடிகள் இடம்பெறுவதற்கும் வழிவகுத்துள்ளது.
'உயர் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெட்டப்படும் வல்லப்பட்டை மரங்களில் மிக அரிதாகவே அகர்வுட் உருவாக்கம் இடம்பெறுவது வேதனைக்குரிய விடயமாகும்' என நவரத்ன குறிப்பிட்டார். பல்வேறு கைதுகள் தொடர்பாக வெளியாவதால், தவறான தகவல்களின் அடிப்படையில் விரைவாக முறையில் இலாபமீட்டும் நோக்கில் இயற்கை காடுகளை அழிக்கப்பட்டு வருகின்றமை மற்றுமொரு பிரச்சனையாகும்.
தெற்காசியாலிலேயே மிகப்பெரிய கன்றுகள் வளர்ப்பு பண்ணையாக கருதப்படும் இங்கிரிய கன்றுகள் வளர்ப்பு பண்ணையில் மேற்கொள்ளப்படும் எகியுலேரியா விதைகள் உற்பத்தி நடவடிக்கைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை சதாஹரித பின்பற்றி வருகிறது.
வணிக நோக்கிலான வனவியலில் பொறுப்பு வாய்ந்த பிளாண்டேஷன் நிறுவனம் எனும் ரீதியில், பசுமை பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான தேவை மற்றும் தொடர்ந்து நிலையான அகர்வுட் அறுவடையில் முக்கிய பங்காளராக இருப்பது தொடர்பில் சதாஹரித விழிப்புணர்வுடன் செயற்பட்டு வருகிறது.
'ஒரே குடும்பத்தை சேர்ந்த அகர்வுட்டினை உற்பத்தி செய்யக்கூடிய பல மரங்கள் இருந்த போதிலும், எமது உற்பத்தியான எகியுலேரியா க்ரஸ்னா ஆனது, உயர் பெறுபேறுகளை தரக்கூடியதும், வணிக ரீதியாக அதிக பெறுமதியை கொண்டதுமான மிகச்சிறந்த வகையை உற்பத்தி செய்கிறது' என சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனத்தின் குழும பணிப்பாளர் சதீஷ் நவரத்ன தெரிவித்தார்.