2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

டென்னிஸ் வீராங்கனைகளின் திறமைகள் பிரகாசிப்பு

A.P.Mathan   / 2015 ஜனவரி 23 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனசக்தி அனுசரணை வழங்கி வரும் டென்னிஸ் வீராங்கனையான பிரபுந்தி பெரேரா, SLTA அமைப்புடன் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ITF) இணைந்து அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஆசிய டென்னிஸ் அபிவிருத்தி சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்.

14 வயதுக்குட்பட்ட பிரிவில் போட்டியிட்ட பெரேரா முதல் வாரத்தில் 3ஆம் இடத்தினை பெற்றிருந்ததுடன், இரண்டாவது வாரத்தில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்ததுடன், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் முதலிடத்தை பெற்றிருந்தார். SLTA மூலம் முன்னெடுக்கப்பட்ட கனிஷ்ட தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட அரையிறுதி போட்டியாளராக கலந்து கொள்வதற்காகவும் இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

2015ஆம் ஆண்டிற்கான அனைத்து சர்வதேச நிகழ்ச்சிகளிலும் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 'இலங்கை 14 வயதுக்குட்பட்ட தேசிய அணி' சார்பாக விளையாடுவதற்காக SLTA மூலம் பிரபுந்தி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மற்றுமொரு வளர்ந்து வரும் இளம் மெய்வல்லுநரான 10 வயதுடைய அன்ஜலிகா குறேரா கடந்த வருடம் மிகச் சிறப்பாக விளையாடி 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடத்தை பெற்றுள்ளார். ஜனசக்தியின் அனுசரணை பெற்று வரும் இளம் டென்னிஸ் வீராங்கனையாக குறேரா இருப்பதுடன், '10 வயதுக்குட்பட்ட கனிஷ்ட தேசிய சம்பியன்' எனும் கௌரவ பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கை டென்னிஸ் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட அனைத்து டென்னிஸ் போட்டிகளிலும் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் சம்பியனாக தொடர்ந்து கௌரவிக்கப்பட்ட இளம் வீராங்கனைக்கு இது வெற்றியின் சிகரமாக அமைந்துள்ளது.

பொதுக் காப்புறுதி பிரிவின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான தயாளினி அபேகுணவர்தன நீர்கொழும்பு பிரதேசத்திலிருந்து இந்த இரு டென்னில் வீராங்கனைகளின் திறமைகளையும் அடையாளம் கண்டிருந்ததுடன், அவர்களை ஜனசக்தியின் விளையாட்டு வீரர்களுக்கான அனுசரணை திட்டத்தில் உள்வாங்கியிருந்தார். 

'இந்த இரு நம்பிக்கைக்குரிய வீராங்கனைகளுடனும் கைகோர்த்தமையிட்டு ஜனசக்தி மிகவும் பெருமையடைகிறது. இந்த இரு டென்னிஸ் வீராங்கனைகளுக்கும் உதவிக்கரம் நீட்டியமை ஏகமனதாக முடிவு செய்யப்பட்டிருந்ததுடன், 2014ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜனசக்தி அனுசரணை வழங்கி வருகிறது. அவர்கள் மிகச்சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி இந்த ஆண்டினை நிறைவு செய்திருந்ததுடன், எதிர்வரும் ஆண்டுகளில் இன்னும் பிரகாசமான எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளோம்' என அபேகுணவர்தன தெரிவித்தார்.

பிரபுந்தி மற்றும் அன்ஜலிகா ஆகியோருக்கு HIT டென்னிஸ் அக்கடமி மூலம் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. ஜனசக்தி நிறுவனமானது கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாக தகுதியுடைய மெய்வல்லுநர்களுக்கு அனுசரணை வழங்கி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X