2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

றக்பி போட்டிக் கனவினை நம்நாட்டு மாணவனுக்கு வழங்கும் DHL ஸ்ரீ லங்கா

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இளம் றக்பி வீரரொருவர் தமது மாவட்டத்தின் பெருமையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2015 ஆம் ஆண்டிற்கான  உலகக் கிண்ண றக்பி போட்டிகளின் (RWC) உத்தியோகபூர்வ பந்தினை நடுவரிடம் கையளிப்பதற்கான வாய்ப்;பினை பெறவுள்ளார்.

உலகின் முன்னணி சர்வதேச பொருட்கள் விநியோக சேவை வழங்குநரும் மற்றும் உலகக் கிண்ண றக்பி போட்டித்தொடரின் உலகளாவிய பொருட்கள் விநியோக சேவை பங்காளருமான Deutsche Post DHL குழுமத்தின் மூலம் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் தெரிவு செய்யப்படும் மாணவனுக்கு போட்டியில் பங்குகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

'Match Ball Delivery' செயற்திட்ட அறிமுக நிகழ்வில் DHL Express இன் இலங்கை செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி திமித்ரி பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'உலகளாவிய ரீதியில் றக்பி போட்டிகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான வலுவான பாரம்பரியத்தை DHL கொண்டுள்ளதுடன், இத்தகைய தனிப்பட்ட வாய்ப்பினை வழங்கும் வகையிலான இப் போட்டித்தொடருடனான கைகோர்ப்பு குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம்' எனக் கூறினார்.

'2015 ஆம் ஆண்டிற்கான  றக்பி உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் விசேட பங்கினை வகிக்க இலங்கை மாணவரொருவருக்கு வாழ்நாளில் ஒரேயொரு தடவை மாத்திரம் கிடைக்கக்கூடிய அரிய வாய்ப்பாக இது அமைந்துள்ளது' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

'அதிர்ஷ்டசாலி வெற்றியாளருக்கான வெகுமதி பரிசில் போட்டிக்கான இரு விமான பயணச்சீட்டுகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆடை, DHL றக்பி பந்து, போட்டி நடைபெறும் நகரம்/ இடத்திற்கான இடமாற்றம், திரும்பி வருவதற்கான விமான பயணச்சீட்டு, இரு இரவு தங்குமிட வசதி, போட்டி பந்து கையளிப்பு புகைப்படம் ஆகியவற்றோடு RWC 2015 DHL Merchandise Kit உம் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் வெற்றியாளருடன் பயணிப்பதற்கான வாய்ப்பு அவரது பெற்றோர் அல்லது பொறுப்பாளருக்கு வழங்கப்படவுள்ளது.

றக்பி விளையாடும் நாடுகளிலுள்ள 47 மாணவர்களுக்கு இதே வாய்ப்பினை DHL வழங்கவுள்ளது. இதன் போது ஒவ்வொரு 40 Pool போட்டிகள் மற்றும் 8 நொக்அவுட் போட்டிகளின் ஆரம்பத்தின் போதும் பந்தினை கையளிப்பதற்கான வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இலங்கையின் செயற்திட்ட அறிமுகம் மற்றும் உலகின் மிகப்பெரிய றக்பி போட்டியில் பங்கேற்பதற்கான தெரிவு முறைகள் தொடர்பில் DHL அண்மையில் அறிவித்திருந்தது.

DHL நிறுவனமானது இலங்கை றக்பி கால்பந்தாட்ட சங்கத்துடன் (SLRFU) இணைந்து 'A' பிரிவு பாடசாலைகளிலிருந்து 36 பிரிவுகளின் கீழ் முதலில் 80 பாடசாலை மாணவர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் போட்டியொன்றினை ஒழுங்கு செய்யவுள்ளது. இதில் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் றக்பி களியாட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

இந்த மாணவர்கள் மத்தியில் விளையாட்டு தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அணியினரின் பங்குபற்றலுடன் விசேட றக்பி பயிற்சிபட்டறையொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் பின்னர் 20 மாணவர்கள் தங்களது றக்பி திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.

இலங்கை றக்பி கால்பந்தாட்ட சங்கத்துடன் (SLRFU) இணைந்து DHL ஸ்ரீ லங்கா நிறுவனம் முன்னர் தீர்மானிக்கப்பட்ட தெரிவு செய்யும் முறைகளுக்கமைவாக, வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் அதேசமயம் இறுதிப்பட்டியல் தொடர்பான ஒன்லைன் வாக்குப்பதிவு பிரச்சாரம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, 'இலங்கையானது வலுவான விளையாட்டு கலாச்சாரத்தை கொண்டுள்ளது. உலகின் மிக உற்சாகமான றக்பி விளையாட்டு போட்டிகளில் ஒன்றான இப்போட்டியில் பங்குபற்றுநர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கி எமது உள்நாட்டு இளைஞர்களை ஊக்குவிப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதனூடாக இலங்கையில் றக்பி அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்கான சிறந்த வாய்ப்பினை வழங்குவதாகவும், மேலும் பல இளைஞர்களை றக்பி விளையாடுவதற்கு ஊக்குவிக்கும் சிறந்த வழிமுறையாகவும் இது அமையும்' என பெரேரா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X