Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த வசதிகள் குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பெரன்டினா அபிவிருத்தி சேவைகள் (BDS) அமைப்பின் மூலமாக சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வு முதூர், பெரியபாலம், அல் மினா மஹா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்றது. முதூர் பிரதேச செயலாளர் ஏ.யூசுஃவ், மேலதிக பிரதேச செயலாளர் ஏ. தாஹிர், பிராந்திய கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம், கிழக்கு மாகாணம், உதவி சமூக சேவைகள் பணிப்பாளர் கே. காண்டீபன் மற்றும் முதூர் பிரதேச சபையின் தலைவர் ஏ.எச்.ஹரிஸ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். திருகோணமலை மாவட்டத்தின் பெரன்டினா அபிவிருத்தி சேவைகள் (BDS) அமைப்பின் முகாமையாளர் விஜிந்தன் சண்முகலிங்கம் அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
முதூர் பிரதேசத்தின் பின்தங்கிய இடங்களைச் சேர்ந்த குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குவதை கருத்தில் கொண்டு பிரதேச செயலகத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நன்கொடை வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான தேவையை கொண்ட 43 பாடசாலை மாணவர்களை பெரன்டினா இனங்கண்டிருந்தது. இதில் 27 பெண்கள் மற்றும் 16 ஆண்கள் உள்ளடங்கியிருந்தனர். முதூர் பிரதேசத்தின் 9 பாடசாலைகளிலிருந்து இந்த பிள்ளைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் பெருமளவான பிள்ளைகள் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டிதிடல், மணல்சேனை, கங்குவேலி, முன்னம்பொடிவேட்டை, கட்டைப்பறிச்சான், அரஃபாநகர், ஜப்லாநகர், சாஃபிநகர், அலிம்சேனை, நல்லூர், இளங்காந்தை, சீதானவெளி, ரால்குளி, கூனிதீவு மற்றும் சூடைகுடா ஆகிய பகுதிகள் முதூர் பிரதேச செயலகத்தில் உள்ளடங்கியுள்ளன.
இந்த நன்கொடைக்காக மொத்தமாக 488,700 ரூபாவை பெரன்டினா செலவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .