2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர்களுக்கான றக்பி களியாட்டத்தை முன்னெடுத்த DHL

A.P.Mathan   / 2015 மே 07 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இளம் றக்பி வீரரொருவருக்கு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2015 ஆம் ஆண்டிற்கான  உலகக் கிண்ண றக்பி போட்டிகளின் (RWC) உத்தியோகபூர்வ பந்தினை நடுவரிடம் கையளிப்பதற்கான வாய்ப்;பினை வழங்கும் DHL RWC Match Ball Delivery செயற்திட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, உலகின் முன்னணி சர்வதேச பொருட்கள் விநியோக சேவை வழங்குநரும், 2015 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண றக்பி போட்டிகளின் உத்தியோகபூர்வ விநியோக சேவை பங்காளருமான DHL Express நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி கொழும்பு குதிரை பந்தயத் திடலில் சிறுவர்களுக்கான றக்பி களியாட்டத்தினை முன்னெடுத்திருந்தது.

DHL Express நிறுவனத்தின் இலங்கை செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி திமித்ரி பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'உலகக் கிண்ண றக்பி போட்டிகளின் அங்கமாக இருப்பது பெருமையளிப்பதுடன், இதனூடாக மாணவர்கள் மத்தியில் றக்பி விளையாட்டினை மேம்படுத்த முடிந்துள்ளது' என்றார். 'DHL மூலம் ஒவ்வொரு நாளும் அதன் வாடிக்கையாளருக்கு வழங்கி வரும் மனப்பான்மை, வேகம், ஆர்வம், துல்லியம் மற்றும் வெற்றி நோக்கிய அர்ப்பணிப்பு போன்றவற்றை சான்று பகரும் விளையாட்டாக றக்பி அமைந்துள்ளது' என மேலும் திமித்ரி தெரிவித்தார்.

இதன் போது ஆரம்பத்தில் 'A' பிரிவு பாடசாலைகளிலிருந்து 36 பிரிவுகளின் கீழ் போட்டியிட்ட 80 பாடசாலை மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இந்த தெரிவு முறைகள் இலங்கை றக்பி கால்பந்தாட்ட சங்கத்தின் (SLRFU) ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது. 

'இந்த செயற்திட்டத்தில் DHL இற்கு ஆதரவு வழங்குவதையிட்டு SLRFU மிகவும் மகிழ்ச்சியடைகின்றது. இந்த செயற்திட்டமானது பல மாணவர்களுக்கு தங்கள் விளையாட்டு திறமையை வளர்ப்பதற்கான வாய்ப்பையும், றக்பி உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் விசேட பங்கினை வகிக்க இலங்கை மாணவரொருவருக்கு வாழ்நாளில் ஒரேயொரு தடவை மாத்திரம் கிடைக்கக்கூடிய அரிய வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது' என SLRFU இன் செயலாளர் நலின் டி சில்வா தெரிவித்தார். 

இந் நிகழ்வில் அடுத்த கட்ட சுற்றுப்போட்டிகளுக்கு மாணவர்களை முன்னேற்றும் வகையில் திறன் மதிப்பீட்டு செயலமர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. றக்பி பயிற்சி செயலமர்வுக்கு மேலதிகமாக, தேசிய அணி உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து விளையாட்டு தொழில்நுட்பங்கள் தொடர்பான குறிப்புகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இந்த செயலமர்வுகளின் இறுதியில் தேசிய அணி உறுப்பினர்களினால் மீளாய்வு செய்யப்பட்டதற்கமைய, 20 மாணவர்கள் தாம் வெளிப்படுத்திய றக்பி திறமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். 

மேலும் மாணவர்கள் தங்கள் றக்பி கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கு அவசியமான ஊட்டச்சத்து தேவைகள் தொடர்பில் விழிப்பூட்டும் வகையிலான ஊட்டச்சத்து செயலமர்வொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தேசிய அணியின் ஊட்டச்சத்து பயிற்றுவிப்பாளரான Etu Tusitala மாணவர்கள் மத்தியில் ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார். இந் நிகழ்வினை புகழ்பெற்ற றக்பி வீரரான சந்த்ரிஷன் பெரேரா தலைமைதாங்கி நடத்தினார்.

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 20 மாணவர்களின் விபரங்கள் வருமாறு: எம்.ஜலால் வஹாஸ்(புனித.பீட்டர்ஸ் கல்லூரி), சஹான் அகலவத்த(றோயல் கல்லூரி), விஷேங்க லிஹான் ரத்நாயக்க(புனித.பீட்டர்ஸ் கல்லூரி), டினெல் லிஹான் ரத்நாயக்க(புனித.பீட்டர்ஸ் கல்லூரி), ஃபய்சா முகம்மட் ஃபகீர், ஹரொவுன் ஆர் ரஃஷுட்(றோயல் கல்லூரி), ஸ்ரீஜித் பெரேரா(திரித்துவக் கல்லூரி), ஃபிலியோ க்ளெயன்ரத்ன(றோயல் கல்லூரி), அபித் முகம்மட் ஜமீல்(திரித்துவக் கல்லூரி), சதீல் நெதக ரணவீர(திரித்துவக் கல்லூரி), அராஷ் ரஃபீல்(திரித்துவக் கல்லூரி), ம்டிட் இலுப்பிட்டிய(றோயல் கல்லூரி), ரஜ்ஹிந்து பந்வின் ஜயசூரிய(றோயல் கல்லூரி), சடித் வின்தக மனம்பெரி(றோயல் கல்லூரி), டபிள்யு.எச்.எச்.சி.சமரசிங்க(திரித்துவக் கல்லூரி), அபிஷ்க எதிரிசிங்க(திரித்துவக் கல்லூரி), சன்தேஷ் அகில் மதேன் பெரேரா டி மெல்(புனித.பீட்டர்ஸ் கல்லூரி), மைக்கேல் லை(வெஸ்லி கல்லூரி), சுஹைல் பெர்னாண்டோ(புனித.பீட்டர்ஸ் கல்லூரி) மற்றும் ருவன் மிரங்க சுபசிங்க(திரித்துவக் கல்லூரி) ஆகியோராவர்.

இதன் ஒருகட்டமாக, DHL Express ஸ்ரீலங்காவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திற்கு சென்றோ அல்லது 0777775544 எனும் இலக்கத்திற்கு SMS செய்வதனூடாகவோ வெற்றியாளருக்கான வாக்குகளை பதிவு செய்ய முடியும். அடுத்த கட்ட தெரிவு முறையான ஒன்லைன் வாக்குப்பதிவு பிரச்சாரம் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X