2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மியன்மாரில் தனது செயற்பாடுகளைத் தொடங்கியுள்ள கொமர்ஷல் வங்கி

A.P.Mathan   / 2015 ஜூலை 02 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கொமர்ஷல் வங்கி மியன்மாரின் யங்கூன் நகரில் அதன் பிரதிநிதித்துவ அலுவலகத்தை ஜுன் மாதம் 8ம் திகதி திங்கட்கிழமை திறந்து வைத்துள்ளது. அந்த நாட்டுக்குள் பிரவேசிக்க விரும்பும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் வர்த்தக துறையினருக்கு தேவையான அடிப்படை ஆலோசனைகளை வழங்குவதையும் அவர்களுக்குத் தேவையான வங்கி ஆலோசனை சேவைகள், நிதி பரிமாற்ற மற்றும் பணப்பரிமாற்ற சேவைகளை வழங்குவதை ஆரம்ப பணியாகக் கொண்டு இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் பிரதிநிதித்துவ அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு அந்நாட்டு மத்திய வங்கியால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது வங்கி கொமர்ஷல் வங்கியாகும்.

கொமர்ஷல் வங்கியின் அலுவலகம் இலக்கம் 42A பன்த்ரா வீதி டாகொன் டவுன்ஷிப், யங்கூன் மியன்மார் என்ற முகவரியில் அமைந்துள்ளது. கொமர்ஷல் வங்கியின் தலைவர் தர்மா தீரசிங்க, முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம், மியன்மாரில் உள்ள இலங்கையின் பதில் தூதுவர் ஹேமன்த சுவர்ணதிலக்க மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தனர். யங்கூனில் உள்ள இந்த பிரதிநிதித்துவ அலுவலகத்தின் முகாமையாளராக சஜீவ் பியரத்ன பணியாற்றுவார்.

இந்த வைபவத்தில் உரையாற்றிய வங்கியின் தலைவர் தர்மா தீரசிங்க 'இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான உள்நாட்டு வர்த்தகத்தில் இன்னமும் விருத்தி செய்யப்படவேண்டிய கணிசமான பல அம்சங்கள் உள்ளதாக நாம் நம்புகின்றோம். மியன்மாரில் செயற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்று இலங்கையின் ஆடை உற்பத்தி ஜாம்பவான்கள் பலர் ஆர்வம் கொண்டுள்ளனர். இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கி இங்கு ஒரு பிரதிநிதித்துவ அலுவலகத்தை கொண்டிருப்பது அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல பெரிதும் உதவியாக இருக்கும். அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர உறவுகளை மேம்படுத்தவும் இது வழிவகுக்கும்' என்றார்.

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம் 'மியன்மாரில் வங்கித்துறை துரித முன்னேற்றம் கண்டு வருவதை நாம் அவதானித்துள்ளோம். பிரதிநிதித்துவ அலுவலகம் ஒன்றை திறப்பதன் மூலம் மியன்மார் வங்கிகளுடன் நெருக்கமான உறவுகளைப் பேணிக் கொள்ளவும் கொமர்ஷல் வங்கிக்கு வசதியாக அமையும். பழைய நடைமுறைகளில் இருந்து புதிய அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட வங்கிச் சேவையை நோக்கிய ஒரு அனுபவத்தையும் அவர்களுக்கு இதன் மூலம் வழங்க முடியும்' என்றார்.

பங்களாதேஷை அடுத்து கொமர்ஷல் வங்கி தனது இரண்டாவது வெளிநாட்டு வங்கிச் சேவையை மியன்மாரில் தொடங்கியுள்ளது. 2003 ஜுலையில் பங்களாதேஷில் கொமர்ஷல் வங்கி அதன் பணிகளைத் தொடங்கியது. அப்போது அங்கிருந்த கிரடிட் அக்ரிகோல் இன்டோசுயிஸ் (CAI) என்ற வங்கியின் சேவைகளைப் பொறுப்பேற்று கொமர்ஷல் வங்கி அதன் பணிகளைத் தொடங்கியது. கொமர்ஷல் வங்கி பொறுப்பேற்ற அதன் முதலாவது கடல் கடந்த வங்கிச் சேவை இதுவாகும். இன்று அது 18 கிளைகளை அங்கு கொண்டுள்ளது. அத்தோடு பினான்ஸியல் மிரர், ரொபின்டெக்ஸ், சிறந்த வெளிநாட்டு வங்கி சேவைக்கான பார்டெக்ஸ் வர்த்தக விருது, பினான்ஸியல் செய்திச் சேவையின் (FNS) பங்களாதேஷின் சிறந்த செயற்பாடு கொண்ட வெளிநாட்டு வங்கிக்கான வர்த்தக விருது, ICMAB இன் சிறந்த தேசிய கூட்டாண்மை விருது என இன்னோரன்ன பல விருதுகளையும் வென்றுள்ளது. 

கொமர்ஷல் வங்கியே உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக (2011-14) இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியாகும்.2015ல் பினான்ஸ் ஆசியாவால் இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளில் நாட்டின் தலைசிறந்த வங்கி என்ற ரீதியில் பல விருதுகளையும் வென்றுள்ளது. 2014ல் இலங்கையின் மிகச் சிறந்த தனியார் வர்த்தக முத்திரையாகவும் அது தெரிவு செய்யப்பட்டது. கொமர்ஷல் வங்கி  நாடு முழுவதும் 242 கிளைகளுடனும், 610 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. அத்தோடு 2013 மற்றும் 2014ம் ஆண்டில் இலங்கையின் மிகச் சிறந்த பத்து கூட்டாண்மை பிரஜைகளில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த பத்தாண்டுகளாக இலங்கையின் மிகவும் கௌரவத்துக்குரிய வங்கியாக LMD தர வரிசையில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. அத்தோடு கடந்த நான்கு வருடங்களாக இதே தர வரிசையில் இலங்கையின் ஒட்டு மொத்த கூட்டாண்மை நிறுவனங்களுள் மிகவும் கௌரவத்துக்குரிய இரண்டாவது நிறுவனம் என்ற இடத்தையும் தக்கவைத்துள்ளது. 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இதே LMD சஞ்சிகையின் தரவரிசையில் மிகவும் நேர்மையான நிறுவனங்களுள் முதலாவது இடத்தையும் தன்னகத்தே தக்கவைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X