Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 02 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயுள் காப்புறுதி துறை தலைவர்களான செலிங்கோ லைஃப் 2015ம் ஆண்டுக்கான அதன் குடும்ப சவாரி ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் அதன் கடைசிக் கட்டமாக மிகப் பெரிய பரிசினை வென்ற 05 காப்புறுதிதாரர்களின் குடும்பங்களை சுவிட்ஸர்லாந்துக்கும் ஐம்பது குடும்பங்களின் உறுப்பினர்களை சிங்கப்பூருக்கும் அழைத்துச் சென்றுள்ளது.
சுவிட்ஸர்லாந்துக்கான நான்கு நாள் சுற்றுலாவின் போது காப்புறுதிதாரர்கள் ஐரோப்பாவின் உச்சி என வர்ணிக்கப்படும் அல்பைன் ரயில் நிலையத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இங்குள்ள அல்பைன் ரயில் நிலையமானது ஐரோப்பாவில் மிகவும் உயரமான இடத்தில் உள்ள ரயில் நிலையமாகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3454 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் சுவிட்ஸர்லாந்துக்கு செல்லும் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் தவறாமல் விஜயம் செய்யும் ஒரு இடமாகும்.
இந்த விஜயத்தின் போது சுவிட்ஸர்லாந்தின் முக்கிய சுற்றுலாப் பிரதேசங்கள், அந்த நாட்டின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட இடங்கள் என சகல இடங்களையும் பார்வையிடும் வாய்ப்பு செலிங்கோ லைஃப்பின் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. சார்ள்ஸ் புச்சர் படகில் உல்லாசப் பயணம், சூரிச்சில் உள்ள நகர மண்டபம் அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேவாலயங்கள், சுவிட்ஸர்லாந்தின் தேசிய போக்குவரத்து நூதனசாலை, ஒரு Imax தியேட்டரில் முப்பரிமான களிபபூட்டும் திரைப்படத்தை பார்வையிடும் வாய்ப்பு, பிளாவில்லில் உள்ள பிரபலமான மெய்ஸ்ட்ரானி சொக்கலேட் தொழிற்சாலை, என்பன உட்பட பல முக்கிய இடங்களையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர்.
சிங்கப்பூருக்கான சுற்றுலாவில் செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். இவர்கள் சிங்கப்பூர் பிளயர், மெர்லியோன், ஆரோக்கிய நீரூற்று, சீனா டவுன், ஓர்கிட் பூங்கா, கேபிள் கார் பயணம் உள்ளடங்களாக செந்தோஸாவுக்கான விஜயம், நீருக்கு அடியிலான உலகம், டொல்பின் காட்சி என பல்வேறு முக்கிய இடங்களை சுற்றிப் பார்வையிட்டதோடு இன்னும் பல இடங்களுக்கும் விஜயம் செய்து முஸ்தபா பொருள் கொள்வனவு தொகுதியில் பொருள்களை வாங்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
'இந்தப் பயணங்களில் பங்கேற்ற வெற்றியாளர்களில் பலருக்கு இது முதலாவது அனுபவமாகும். அவர்களால மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தவர்களாலும்; மறக்க முடியாத ஒரு அனுபவமாகவும் இது பதிவாகியுள்ளது' என்று கூறினார். செலிங்கோ லைஃப்பின் பணிப்பாளரும், பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியுமான துஷார ரணசிங்க. 'இதுதான் குடும்ப சவாரி எண்ணக்;கருவின் மூலாதாரமாகும். செலிங்கோ லைஃப்பின் வாடிக்கையாளராக இருப்பதற்கான உண்மையான அர்த்தமுள்ள வெகுமதி இதுவாகும்'என்று அவர் மேலும் கூறினார்.
2015 குடும்ப சவாரி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு முற்பகுதியில் பத்து காப்புறுதிதாரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த நாற்பது பேர் துபாய்க்கான பயணத்தை மேற்கொண்டனர். 500 குடும்பங்களைச் சேர்ந்த 2000 பேர் லெஷர் வேள்ட்டுக்குமான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டனர்.
செலிங்கோ லைஃப் எட்டாவது ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 565 காப்புறுதிதாரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 2260 பேர் அதிர்ஷ்டத்தை வென்றனர். இலங்கையில் காப்புறுதித் துறையில் மேற்கொள்ளப்படும் பாரிய அளவில் குடும்பங்களை ஒன்றிணைக்கும் பிரம்மாண்டமான ஊக்குவிப்புத் திட்டம் இதுவேயாகும்.
இவ்வாண்டு இரண்டு மேலதிக வர்த்தக முத்திரை தூதுவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். வழமையாக இதில் பங்கேற்கும் சிறியன்த மெண்டிஸ் மற்றும் சஞ்சீவனி வீரசிங்க ஆகியோருடன் நடிகர் ரொஷான் ரணவன, அவரது மனைவி குஷ்லானி ஆகியோரும் இம்முறை குடும்ப சவாரியில் இணைந்து கொண்டனர்.
'குடும்ப சவாரி 8' க்கான ஊக்குவிப்புக் காலம் 2014 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நீடித்தது. இந்தக் காலப்பகுதியில் செயற்படு நிலையில் உள்ள செலிங்கோ லைஃப் ஆயுள் காப்புறுதி கொள்கைகளைக் கொண்டுள்ள எல்லா காப்புறுதிதாரர்களும், செலிங்கோ லைஃப் ஓய்வூதியக் கணக்கை வைத்திருப்பவர்களும், அவரவர் காப்புறுதிகள் மற்றும் கணக்குகளின் கால அடிப்படையில் வெற்றி பெறுவதற்கான பல வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டனர்.
செலிங்கோ லைஃப் 2004ம் ஆண்டு முதல் நாட்டின் நீண்ட கால காப்புறுதிப் பிரிவில் தலைமை தாங்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்றது. கிட்டத்தட்ட சுமார் ஒரு மில்லியன் செயற்படு நிலையில் உள்ள காப்புறுதிக் கொள்கைகளை அது கொண்டுள்ளது. உள்ளுர் காப்புறுதி தொழில்துறையில் அதன் உற்பத்தி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகிய பிரிவுகளில் புத்தாக்க சாதனை படைத்த ஒரு நிறுவனமாகவும் அது அங்கீகாரம் பெற்றுள்ளது. வாடிக்கையாளர் சேவை, வர்த்தக முத்திரை சமநிலையை கட்டியெழுப்பல் மற்றும் சமூக நலச் சேவைகள் என்பனவற்றுக்காக கம்பனி பல்வேறு உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago