Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 09 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி நிதிக் கம்பனிகளுள் ஒன்றாக திகழ்கின்ற கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. ஆனது 2015 மார்ச் 31ஆம் திகதியன்று முடிவடைந்த நிதியாண்டிற்கான தேறிய இலாபமாக ரூபா 2.1 பில்லியனைப் பெற்று, மனதில் பதியத்தக்க 108.7 வீத வளர்ச்சி ஒன்றை பதிவு செய்துள்ளது. 2013/14 நிதியாண்டில் கொமர்ஷல் கிரெடிட் பெற்றுக் கொண்ட ரூபா 1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இந் நிதியாண்டில் பெற்றுள்ள தேறிய இலாபம் நிறுவனத்திற்கு புதியதொரு மைற்கல்லாக அமைகின்றது.
'2014/15 நிதியாண்டில் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட நிதிப் பெறுபேறுகள் மிகவும் அபூர்வமானவையாகும். அதுமட்டுமன்றி நாம் முதன்முதலாக ரூபா 2.1 பில்லியன் இலாபத்தை பெற்றுக் கொண்ட வருடமாகவும் எமது கம்பனியின் வரலாற்றுக் குறிப்புக்களில் இந்த நிதியாண்டு இடம்பிடிக்கின்றது. இக் காலப்பகுதியில் குத்தகை மற்றும் நிதித் துறையில் காணப்பட்ட வேறுபட்ட பரிமாண அளவுகளிலான பல்வேறு சவால்களை வைத்துப் பார்க்கின்ற போது, இந்த அடைவு மேலும் பாராட்டுக்குரியதாகின்றது' என்று கொமர்ஷல் கிரெடிட் நிறுவன பிரதம தொழிற்பாட்டு அதிகாரி ரஜீவ் காசி சிட்டி தெரிவித்தார்.
2014/15 நிதியாண்டில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் வைப்புக்கள் 84.6 வீதத்தினால் அதிகரித்த அதேவேளை, இதில் குறிப்பாக 93.7 வீதமான வளர்ச்சியானது நிலையான வைப்புக்களில் இருந்து கிடைக்கப் பெற்றதாக இருந்தது. பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியாண்டின் ஆரம்பத்தில் ரூபா 31.6 பில்லியனாக காணப்பட்ட மொத்த சொத்துக்களின் பெறுமதி, நிதியாண்டின் இறுதியில் ரூபா 57.7 பில்லியனாக அதிகரித்திருந்தது.
அதேவேளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியாண்டில் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் வட்டி வருமானம் ரூபா 11.1 பில்லியனாக பதிவாகியது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 61.2 வீதம் அதிகமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் மொத்த கடன் வழங்கல் தொடர்களில் 80 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியை முன்கொண்டு சென்ற பிரதான காரணிகளாக - குத்தகை மற்றும் வாடகைக் கொள்வனவு, அத்துடன் நுண் நிதிக் கடன்கள் என்பன காணப்பட்டதுடன், இவை முறையே 101.2 வீதத்தினாலும் 104.1 வீதத்தினாலும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
'வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட உற்பத்திகளை வழங்குவதற்கான எமது தொடர்ச்சியான முன்முயற்சிகள் மற்றும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட சேவைசார் பண்பியல்புகள் போன்றவையே, தொடர்ச்சியாக பல வருடங்கள் நாம் அடையப் பெற்ற வளர்ச்சிப் போக்கிற்கு அடிக்கற்களாக அமைந்தன. மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கு எம்மால் இயலுமாகியுள்ளது. எம்முடைய வைப்புத் தளத்திலும் கடன் வழங்கல் தொடர்களிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது இந்த நம்பிக்கையை சான்று பகர்வதாக உள்ளது' என்றும் காசி சிட்டி மேலும் கூறினார்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சென்றடையும் விதத்தில் கொமர்ஷல் கிரெடிட் தனது சேவை வலையமைப்பையும் கணிசமான அளவுக்கு விஸ்தரித்திருக்கின்றது. 2014/15 நிதியாண்டு காலப்பகுதியில் நிறுவனம் தனது சேவை வலையமைப்பை 75 அமைவிடங்களில் இருந்து 119 இடங்களுக்கு விஸ்தரித்துள்ளது. இவ்வாறு விஸ்தரிப்புச் செய்வதற்கான இடங்களை தெரிவு செய்யும் போது, தற்போதைய மற்றும் எதிர்கால வணிக ரீதியான உள்ளார்ந்த சாத்தியக்கூறுகளை மட்டும் கம்பனி கருத்திற் கொள்வதில்லை. மாறாக, அவ்வாறான பிரதேசங்களில் வாழும் மக்களின் தேவைகளையும் கவனத்தில் கொண்டு நிறுவனம் செயற்படுகின்றது.
சேவை வலையமைப்பை விஸ்தரிப்பு செய்ததன் மூலம், கொமர்ஷல் கிரெடிட் தனது வணிக ரீதியான நடவடிக்கைகளை மேலும் அபிவிருத்தி செய்யக் கூடிய ஒரு ஸ்தானத்தில் தன்னை சிறப்பாக நிலைநிறுத்தியுள்ளது. நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் கணிசமான உபாய முதலீடுகளை மேற்கொள்வதிலும் கம்பனி ஈடுபட்டுள்ளது. அதிகரித்துச் செல்லும் சேவை வலையமைப்பு, அதிகரிக்கும் கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கை, மற்றும் வணிக தேவைகளினால் வேண்டப்படுகின்ற முன்னேறிச் செல்லும் செயலாற்றல் மற்றும் இயலுமை ஆகியவற்றை கருத்திற் கொண்டு நோக்குகையில் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை விருத்தி செய்தல் என்பது ஒரு அடிப்படை தேவைப்பாடாக காணப்படுகின்றது.
2015 மார்ச் 31ஆம் திகதி முடிவடைந்த நிதியாண்டுக்கான இறுதி பங்கிலாபமாக ரூபா 1 இனை வழங்குமாறு பணிப்பாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இது, இந்நிதியாண்டில் இடைக்கால பங்கிலாபமாக பங்கொன்றுக்கு வழங்கப்பட்ட ரூபா 0.50 இற்கு மேலதிகமானதாகும்.
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியாண்டில், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு பதிவுசெய்யப்பட்ட நிதிக் கம்பனியான ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பி.எல்.சி. (TFI) நிறுவனத்தின் 98.35மூ உரிமையாண்மையை கொமர்ஷல் கிரெடிட் கையகப்படுத்தியது. இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட நிதித் துறை கூட்டிணைவு நிகழ்ச்சித் தி;ட்டத்தின் கீழ் மேற்படி கையகப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago