Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 09 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வியாபார தலைவர்களை உருவாக்குவதில் SLIIT இன் வியாபார பீடம் கவனம் செலுத்தி வருகிறது. முதலாவது ஆண்டு முதல், மாணவர்களுக்கு உயர் மட்ட பகுத்தறிவு, பிரச்சனைகளை தீர்த்தல் மற்றும் தொடர்பாடல் ஆளுமைகளை விருத்தி செய்வது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் மூலம் அவர்களுக்கு நிஜ உலகில் வெற்றிகரமாக இயங்கக்கூடியதாக இருந்தது. ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் மூலமாக வழங்கப்பட்ட BBA கற்கையின் மூலமாக அனுகூலம் பெற்ற மாணவர்களில் ஒருவராக இசுரு குணரட்ன திகழ்கிறார்.
தற்போது MAS Intimates (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தில் முகாமைத்துவ தகவல் அணியின் கணக்காளராக இவர் தற்போது பணிபுரிவதுடன், தனது MBA கற்கைகளை தொடர்வதுடன், திட்ட முகாமைத்துவ கல்வியகத்தின் அங்கத்தவராகவும் பணியாற்றுகிறார்.
குணரட்ன கருத்து தெரிவிக்கையில், 'எனது நிறுவனத்தில் நான் இன்று வகிக்கும் பதவி நிலைக்கு உயர்வடைய நான் பின்தொடர்ந்திருந்த பட்டப்படிப்பு பெரும் உதவியாக அமைந்திருந்தது. பாரம்பரிய தகைமைகளை போலல்லாமல், இந்த கற்கை மூலமாக நான் பெற்றுக் கொண்ட அனுபவம் என்பது நடைமுறை சாத்தியமான முகாமைத்துவ பயிற்சிகளை வழங்கியிருந்தது. இதன் காரணமாக தொழில் சூழலுக்கு ஏற்ற வகையில் என்னை மாற்றிக் கொள்ள உதவியாக இருந்தது. சந்தைப்படுத்தல், சர்வதேச வியாபாரம் மற்றும் கூட்டாண்மை நிதி போன்றன தொடர்பில் பரந்தளவு அனுபவத்தை எமக்கு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது' என்றார்.
2012 இல் தனது பட்டத்தை பெற்றுக் கொண்ட போது, குணரட்னவுக்கு 'சிறப்பான பெறுபேறுகளை' பதிவு செய்தமைக்கான விருது வழங்கப்பட்டிருந்தது. SLIIT இல் இசுரு வியாபார மற்றும் தகவல் முகாமைத்துவ கழகத்தின் அங்கத்தவராகவும் செயலாற்றியிருந்தார்.
தமது அனுபவம் தொடர்பில் குணரட்ன தொடர்ந்து தெரிவிக்கையில், 'இது மிகவும் பிரத்தியேகமான அனுபவமாகும். பாடத்திட்டத்துக்கு பெருமளவு முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், மாணவ சமூகங்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு பெருமளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இது போன்ற வாய்ப்புகள் மாணவர்கள் மத்தியில் சமபலமான இயல்பை கட்டியெழுப்பும் வகையில் அமைந்துள்ளன' என்றார்.
மற்றுமொரு மாணவியாக முனாஸா ரஃபீக் திகழ்கிறார். தமது ஆண்டில் பயின்றவர்கள் மத்தியில் இவர்கள சிறந்த மாணவருக்கான விருதை பெற்றிருந்தார். தமது கல்விச் செயற்பாடுகை தொடரும் போது இவர் IDEATORS க்காக தெரிவாகியிருந்தார். இவர் தற்போது யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தில் உதவி வர்த்தக நாம முகாமையாளராக பணியாற்றி வருகிறார்.
2014 ஜுன் மாதம் கான்ஸ் லயன்ஸ் இன்டர்நஷனல் கொண்டாட்ட நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அணியில் முனாஸா இடம்பெற்றிருந்தார். சந்தைப்படுத்தலை பொறுத்தமட்டில் உலகின் மாபெரும் ஆக்கபூரவ கொண்டாட்டமாக இது அமைந்துள்ளது.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago