2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

உலகை சென்றடையும் 'பிரைட்ஸ் ஒஃப் ஸ்ரீலங்கா' சஞ்சிகை

A.P.Mathan   / 2015 ஜூலை 10 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதன்iமான திருமணம்சார் சஞ்சிகையாக திகழும் 'பிரைட்ஸ் ஒஃப் ஸ்ரீ லங்கா' (Brides of Sri Lanka) ஆனது, உலகெங்குமுள்ள வாசகர்கள் பெற்று வாசிக்கக் கூடியவாறு தனது அடைவுமட்டத்தை அண்மையில் விஸ்தரித்துள்ளது. கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் பெருமளவில் கூடியிருந்த மதிப்பிற்குரிய விருந்தினர்கள் முன்னிலையில், அனைத்து விதமான அப்பிள் மற்றும் அன்ட்ரொயிட் கையடக்க தொலைபேசிகளுக்குமான தனது பிரயோக மென்பொருளை (App) அறிமுகம் செய்து வைத்ததன் மூலமே மேற்படி சஞ்சிகை இவ் விஸ்தரிப்பை மேற்கொண்டுள்ளது. 

இதன்மூலம் தனக்கே உரித்தான பிரயோக மென்பொருளை அறிமுகம் செய்யும் முதலாவது நவநாகரிக, திருமணம்சார் அத்துடன் கல்யாண சஞ்சிகை என்ற சாதனையை 'பிரைட்ஸ் ஒஃப் ஸ்ரீலங்கா' நிலைநாட்டியிருக்கின்றது. இச் சஞ்சிகையின் அச்சிடப்பட்ட பிரதியை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உலகின் எப்பாகத்திலேனும் வாழ்கின்ற எந்தவொரு திருமண ஜோடிக்கும் இந்த மென்பொருள் இப்போது கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது. 

சஞ்சிகையின் ஆசிரியரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான நெலும் ஹத்ஹெல்லவுடன், இலங்கையின் திருமணம்சார் மற்றும் அழகுக்கலை துறையில் முன்னணியில் உள்ள இரு ஆளுமைகளான ரமணி பெர்ணான்டோ மற்றும் ஹரிஸ் விஜயசிங்க ஆகியோரும் இணைந்து இந்த பிரயோக மென்பொருளை அறிமுகப்படுத்தி வைத்தனர். இச் சஞ்சிகை 2007 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டபோது தற்செயலாக அதனது முதற் பிரதியானது ரமணி பெர்ணான்டோவுக்கே வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

'08 ஆண்டுகளுக்கு முன்னர் இச் சஞ்சிகையை அறிமுகம் செய்ததில் இருந்து இதுவரை 32 இதழ்களை நாம் பிரசுரித்து இருக்கின்றோம். முதல் இரண்டு வருடங்களிற்கும் வருடமொன்றுக்கு மூன்று இதழ்களை வெளியிடுவது என்ற அடிப்படையில் முதலில் பிரசுரிக்க தொடங்கினோம். இருப்பினும் எமது வாசகர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தொடர்ச்சியான வேண்டுகோள்களை அடுத்து, வருடமொன்றுக்கு நான்கு இதழ்கள் என்ற அடிப்படையில் அதன் வெளியீட்டை அதிகரித்தோம்' என்று நெலும் ஹத்ஹெல்ல தெரிவித்தார். 

'இந்த கடந்த எட்டு வருடங்களிலும் இலங்கையில் வாழும் பல நூற்றுக்கணக்கான மக்களை இது சென்றடைந்தது மட்டுமன்றி, www.bridesofsrilanka.com என்ற எமது இணையத்தளத்தின் ஊடாக வெளிநாடுகளில் வாழ்கின்ற பெருமளவிலான இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவரிடையே இலங்கையை திருமணத்திற்கு பொருத்தமான ஒரு அடைவிடமாக சந்தைப்படுத்தும் பணியையும் நாம் வெற்றிகரமாக  மேற்கொண்டு இருக்கின்றோம். எமது விளம்பரதாரர்களுக்கு வருமானத்தை பெற்றுத்தரும் ஒரு சிறந்த வழிமுறையாக இது அமைந்துள்ளது மாத்திமன்றி, அந்நியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் துணையாக உள்ளது' என்றும் அவர் தெரிவித்தார். 

'வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்கள் மற்றும் இந்த சஞ்சிகையின் அச்சிடப்பட்ட பிரதியை பெற்று வாசிக்க முடியாத நிலையில் உள்ளவர்களிடம் இருந்து எமக்கு தொடர்ச்சியான வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கமைவாகவே இந்த பிரயோக மென்பொருளை நாம் அறிமுகப்படுத்துகின்றோம். இப் புதிய மென்பொருளை (App) அப்பிள் கையடக்க தொலைபேசியின் 'அப்பிள் அப்ஸ்டோர்' அல்லது 'கூகுள்பிளேய்' ஆகியவற்றில் இருந்து எவ்வித கட்டணங்களும் இன்றி இலகுவாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைப் பயன்படுத்தி நபர் ஒருவர் இச் சஞ்சிகையின் சில பக்கங்களை பார்வையிடவும் அதன் பின்னர் சஞ்சிகையை கொள்வனவு செய்யவும் முடியும். இந்த மென்மொருளை ஐபேட், ஐஃபோன், அன்ட்ரொயிட் கைத்தொலைபேசி அல்லது அன்ட்ரொயிட் டெப் போன்றவற்றில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதனது அன்ட்ரொயிட் பதிப்பானது 2015 ஜூலை 31ஆம் திகதி முதல் வாசகர்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருக்கும்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

'திருமணத்தைப் பொறுத்தவரை - பல்வகைப்பட்ட அற்புதமான திருமணம்சார் உற்பத்திகள், இடங்கள் மற்றும் சேவைகளை மிகவும் செலவுச் சிக்கனமான விலையில் வழங்கக் கூடிய ஆற்றலை இலங்கை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. திருமணம் செய்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகின்ற அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவரை கருத்திற் கொண்டு நோக்குகையில், இப் புதிய பிரயோக மென்பொருளானது எமது சஞ்சிகையையும் அதேபோல் இத் துறையில் இலங்கையிலுள்ள எண்ணற்ற சேவை வழங்குனர்களையும் வெளியுலகுக்கு காட்சிப்படுத்தும். இம் முயற்சி விளம்பரப்படுத்தலை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்வதாக அமையும். எமது எண்ணிலடங்கா விளம்பரதாரர்களின் உற்பத்திகள் மற்றும் சேவைகளை எமது சஞ்சிகையின் ஊடாக இன்று முழு உலகமும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதால் அவர்கள் மிகவும் அனுகூலமடைகின்றனர்' என்று ஹெத்ஹெல்ல கூறி முடித்தார். 

கைக்கடக்கமான A5 அளவில் வெளியாகும் முதலாவது சஞ்சிகையாக 'பிரைட்ஸ் ஒஃப் ஸ்ரீலங்கா' காணப்படுகின்றது. அத்துடன் 'விலைக் கழிவு கூப்பன்' என்ற தொனிப்பொருளை இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்திய சஞ்சிகையாகவும் திகழ்கின்றது. இந்த தொனிப்பொருளை அதன் பின்னர் வேறு பலரும் அப்படியே அதனை பிரதிபண்ணி அது போன்ற வெகுமதியை அறிமுகம் செய்துள்ளனர். 

'பிரைட்ஸ் ஒஃப் ஸ்ரீ லங்கா' சஞ்சிகையானது தனது 25ஆவது இதழ் வெளியீட்டை கொண்டாடும் முகமாக 2013 செப்டம்பரில் இலங்கையின் மிகப் பெரிய திருமணம்சார் ஒன்றுகூடலை நடாத்தியது. இதில் 120 மணப் பெண்களையும் 20 மணமகன்களையும் உள்ளடக்கியதான திருமணம்சார் கண்காட்சி ஒன்றும் இடம்பிடித்திருந்ததுடன், கிட்டத்தட்ட 50 இலங்கை வடிவமைப்பாளர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X