Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 10 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் மற்றும் அலியோன்ஸ் ஃபுரொன்சேய்ஸ் த கோட்டே (Alliance Française de KOTTE) ஆகியவை இணைந்து, ஊடகத்துறை ஆளுமையான குமார் டீ சில்வாவின் ஐந்தாவது கறுப்பு – வெள்ளை புகைப்படங்களின் கண்காட்சியை 'பாரிஸ் வீதிகள்' (The Streets of Paris) எனும் பெயரில் ஏற்பாடு செய்து வழங்குகின்றன.
'பிரெஞ்சு வசந்தகால திருவிழா 2015' இன் ஓர் அங்கமாக இடம்பெறும் இக் கண்காட்சியை கட்டணம் எதுவுமின்றி இலவசமாக பார்வையிடலாம் என்பதுடன், ஜூலை 11ஆம் சனிக்கிழமையும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் முற்பகல் 10 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை லயனல் வென்ற் கலையரங்கில் பொது மக்கள் பார்வையிடுவதற்காக இக் கண்காட்சி திறந்திருக்கும்.
இங்கு விற்பனையாகும் புகைப்படங்களில் இருந்து கிடைக்கப் பெறும் அனைத்து இலாபமும், விருது பெற்ற ஊடகத்துறை புகைப்படவியலாளரான அமரர் றுக்சான் அபேவன்சவின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் அளிக்கும் நிதியத்திற்கு செல்லும்.
இக் கண்காட்சியின் பிரமாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. றுவான் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாகவும், பழம்பெரும் சினிமா நட்சத்திரமான இரங்கி சேரசிங்க கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
குமார் டீ சில்வா, பிரான்ஸ் நாட்டுடன் முப்பது வருடகால நீண்டதொரு தொடர்பை கொண்டுள்ளார். பிரான்ஸின் கலாசார மரபுரிமை பற்றிய விழிப்பூட்டலையும்; வளப்படுத்தலையும் மேம்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முன்முயற்சிகளுக்காக பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தினால் அவர் 'Chevalier in the Order of Arts and Letters' என்ற கௌரவ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதற்கு முன்னர் இடம்பெற்ற அவரது கண்காட்சிகளை www.kumardesilva.com என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும்.
இல.11, கெப்பிட்டிபொல மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரியில் அமைந்திருக்கும் அலியோன்ஸ் ஃபுரொன்சேய்ஸ் த கோட்டே (Alliance Française de Kotte) ஆனது கொழும்பு மற்றும் கொழும்பு பொரும்பாக பகுதிகளில் அமைந்துள்ள, பிரான்ஸின் ஒரேயொரு பிரெஞ்சு மொழி மற்றும் கலாசார நிலையமாக திகழ்கின்றது. இதுபோன்ற வேறு ஏதேனும் கிளை நிலையங்கள் கொழும்பில் இல்லை.
அலியோன்ஸ் ஃபுரொன்சேய்ஸ் த கோட்டே நிலையம், பாரிஸ் நகரிலுள்ள பவுண்டேசன் அலியோன்ஸ் ஃபுரொன்சேய்ஸ் அமைப்புடன் முழுமையாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளதுடன் பிரான்ஸ் அரசாங்கம் மற்றும் இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் ஆகியவற்றின் பூரண ஆதரவையும் பெற்று இயங்குகின்றது.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago