2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகின்றவர்களுக்கு தமது 'பணத்தை இரட்டிப்பாக்க' கொமர்ஷல் வங்கி

A.P.Mathan   / 2015 ஜூலை 10 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல்கடந்த நாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தை இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி ஊடாக பெற்றுக் கொள்ளும் இலங்கையர்கள் அடுத்த இரண்டு மாத காலப்பகுதியில் தமது பணத்தை இரட்டிப்பாக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என வங்கி அறிவித்துள்ளது.

'நீங்கள் பெற்றுக் கொள்ளும் பணத்தின் பெறுமதியை இரட்டிப்பாக்குங்கள்' என்ற தொனிப்பொருளின் கீழான இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான ரூபாய்களை பரிசாக வழங்க வங்கி முன்வந்துள்ளது. கொமர்ஷல் வங்கியின் e-exchange முறையின் கீழ் பணம் பெறுகின்றவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டவுள்ளது. இது வங்கியின் அதி நவீன இணைய வழி பணப்பரிமாற்ற சேவையாகும். இதேபோல் மணிகிராம், றியா, அல்லது எக்ஸ்பிரஸ் மணி சேவை ஊடாக பணம் பெறுபவர்களுக்கும் இந்த அதிர்ஷ்டம் காத்திருக்கின்றது.

2015 ஓகஸ்ட் 31 வரை இவற்றின் ஊடாக பணம் பெறுகின்றவர்கள் கணனி மயப்படுத்தப்பட்ட அதிர்ஷ்டச் சீட்டிழுப்பு ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படுவர் என வங்கி அறிவித்துள்ளது. தனி நபர் ஒருவருக்கு ஆகக் கூடுதலாக 50,000 ரூபா பரிசு காத்திருக்கின்றது. 50,000 அல்லது அதற்கு குறைவான தொகையை பெற்றுக் கொள்கின்றவர்களுக்கு அந்தத் தொகை இரட்டிப்பாகும் வாய்ப்பு உள்ளது.

வெளிநாட்டு பணப்பரிமாற்ற சேவையில் கொமர்ஷல் வங்கி இலங்கையில் மிகவும் செயறிறரன் மிக்க பங்களிப்பைச் செலுத்தி வருகின்றது. இந்த விடயத்தில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி பல்வேறு தெரிவுகளை வழங்குகின்றது. இந்த வங்கியில் கணக்கு இல்லாத ஒருவருக்கு கூட வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்பலாம். கணிசமான அளவு இலங்கையர்கள் தொழில் புரியும்  உலகம் முழுவதும் உள்ள முக்கிய சந்தைகளில் கொமர்ஷல் வங்கி தனக்கே உரித்தான வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரிகளைக் கொண்டுள்ளது.

வங்கிக்கே உரித்தான பிரத்தியேகமான பணப்பரிமாற்ற மேடை முற்றிலும் பாதுகாப்பானதாகும். செலவு குறைந்த பணப்பரிமாற்ற வசதியுடன் கூடிய இந்த தளம் உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் முகவராண்மைகளைக் கொண்டு செயற்படுகின்றது. இந்த முறை மூலம் பணத்தைப் பெறும் எந்த ஒரு நபரும் நாடு முழுவதும் உள்ள வங்கியின் 243 கிளைகள் ஊடாகவும் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இவற்றுள் 60க்கும் மேற்பட்டவை வங்கி விடுமுறை தினங்களிலும் திறந்திருக்கும். நாடு முழவதும் உள்ள 613 ATM இயந்திர வலையமைப்பின் ஊடாகவும் வாடிக்கையாளர்கள் தமக்கு அனுப்பப்படும் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையில் தனியொரு வங்கி கொண்டுள்ள மிகப் பெரிய பண விநியோக வலையமைப்பு இதுவேயாகும். E-exchange நிலவரங்கள் பற்றி இணையத்தளம் வழியாக அறிந்து கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த முறை ஊடாக பணம் கிடைத்ததும் குறுந்தகவல் அனுப்பும் வழி முறையும் நடைமுறையில் உள்ளது.

மணிகிராம் உலகளாவிய பணப்பரிமாற்ற சேவையாகும். 256,000 முகவர் நிலையங்களுடன் சர்வதச வலையமைப்புடன் செயற்படுகின்றது. 192 நாடுகளில் உள்ளவர்களுக்கு இதனூடாக நம்பிக்கையாகவும் வசதியாகவும் பணத்தை அனுப்பி வைக்க முடிகின்றது. இலங்கையில் கொமர்ஷல் வங்கியே மணிகிராம் சேவை வலையமைப்பின் மிகச் சிறந்த பிரிவாகச் செயற்படுகின்றது.

றியா நிதிச் சேவைகள் உலகில் மூன்றாவது பெரிய பணப்பரிமாற்ற கம்பனியாகும். அதன் உலகளாவிய வலையமைப்பின் ஊடாக ஆறு கண்டங்களில் 136 நாடுகளில் 140இ000 முகவராண்மை நிலையங்களை கொண்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் மணி சேவையும் உலகின் மிகப் பெரிய பணப்பரிமாற்ற சேவை வலையமைப்புக்களில் ஒன்றாகும். 150 நாடுகளில் 170,000 முகவராண்மைகளை கொண்டுள்ளது.

'இந்த சர்வதேச பணப்பரிமாற்ற கம்பனிகளுடனான எமது பங்குடைமைகள் மூலம் உலகின் எந்தவொரு மூலையில் இருந்தேனும் ஒருவர் இலங்கைக்கு பணம் அனுப்ப விரும்பினால் அதை பெற்றுக் கொடுக்கக் கூடிய நிலையில் நாம் உள்ளோம்'என்று கூறினார் கொமர்ஷல் வங்கியின் ந வங்கிச் சேவை பிரதான முகாமையாளர் பிரதீப் பந்துவன்ஸ. 'இந்த விரிவான உலக வலையமைப்பு தேசிய ரீதியான எமது ஸ்திரப்பாட்டுடன் இணைந்து கீர்த்தி மிக்க கொமர்ஷல் வங்கியை வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தை பெற்றுக் கொள்வதற்கான பிரதான வங்கியாக ஆக்கியுள்ளது' என்று அவர் மேலும் கூறினார்.

கொமர்ஷல் வங்கியே உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இடம்பிடித்துள்ள இலங்கையின் ஒரேயொரு வங்கியாகும்.2015ல் பினான்ஸ் ஆசியாவால் இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் நாட்டின் தலைசிறந்த வங்கி என்ற ரீதியில் பல விருதுகளையும் வென்றுள்ளது. 2014ல் இலங்கையின் மிகச் சிறந்த தனியார் வர்த்தக முத்திரையாகவும் தெரிவு செய்யப்பட்டது. அத்தோடு 2013 மற்றும் 2014ம் ஆண்டில் இலங்கையின் மிகச் சிறந்த பத்து கூட்டாண்மை பிரஜைகளில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த பத்தாண்டுகளாக இலங்கையின் மிகவும் கௌரவத்துக்குரிய வங்கியாக LMD தர வரிசையில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. அத்தோடு கடந்த நான்கு வருடங்களாக இதே தர வரிசையில் இலங்கையின் ஒட்டு மொத்த கூட்டாண்மை நிறுவனங்களுள் மிகவும் கௌரவத்துக்குரிய இரண்டாவது நிறுவனம் என்ற இடத்தையும் தக்கவைத்துள்ளது. 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இதே LMD சஞ்சிகையின் தரவரிசையில் மிகவும் நேர்மையான நிறுவனங்களுள் முதலாவது இடத்தையும் தன்னகத்தே தக்கவைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X