2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஹிபிஸ்கஸ் கூந்தல் சிகிச்சையை அறிமுகம் செய்துள்ள 4rever Skin Naturals

A.P.Mathan   / 2015 ஜூலை 10 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது புதிய தயாரிப்பான ஹிபிஸ்கஸ் கூந்தல் சிகிச்சை எண்ணெய் வகையை 4rever Skin Naturals அறிமுகம் செய்துள்ளது. இதற்கு கூந்தல் வளர்ச்சி ஒழுங்குபடுத்துநரான FDA இன் அனுமதி கிடைத்துள்ளது. இந்த எண்ணையானது முக்கியமாக கூந்தல் உதிர்தல் மற்றும் தலை வழுக்கையடைவதை தவிர்த்து, கூந்தல் மற்றும் சிகையின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஹிபிஸ்கஸ் கூந்தல் எண்ணெய் என்பது இலங்கையின் கூந்தல் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பெறுபேறுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அழகியல் மற்றும் வனப்பு சிகிச்சை நிபுணரான திருமதி. சாந்தனி பண்டார அவர்களின் மூலமாக 4rever Skin Naturals தாபிக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய தயாரிப்பு தொடர்பில் 4rever Skin Naturals இன் தாபகரான சாந்தனி பண்டார உரையாற்றுகையில், 'ஹிபிஸ்கஸ் கூந்தல் பராமரிப்பு எண்ணெய் என்பது, சகல இயற்கை சேர்மானங்களை கொண்டுள்ளது. உயர் தரம் வாய்ந்த, சகாயமான தீர்வுகள் மூலமாக எமது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறோம். கூந்தல் உதிர்வுக்கான பிரதான காரணங்களாக, வேலைப்பழு, தவறான உணவு பழக்க வழக்க முறைகள் அல்லது போதியளவு போஷாக்கின்மை போன்றன அமைந்துள்ளன. ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொருந்தும் வகையில் இந்த தயாரிப்பு அமைந்துள்ளதுடன், FDA அனுமதியைப் பெற்ற கூந்தல் வளர்ச்சி தொடர்பான ஒரே தயாரிப்பாக இது அமைந்துள்ளது. 28 நாட்களினுள் பெறுபேறுகளை பார்வையிடக்கூடியதாக இருக்கும்' என்றார்.

இயற்கையான மற்றும் பிரத்தியேகமான மூலப்பொருட்களை கொண்டுள்ள ஹிபிஸ்கஸ் கூந்தல் சிகிச்சை எண்ணெய் நீண்ட நேரம் நிலைத்திருக்கக்கூடிய ஹிபிஸ்கஸ் நறுமணத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. கூந்தல் உதிர்வதை குறைத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சான்றளிக்கப்பட்ட மூலிகை தோட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூலப்பொருட்களை கொண்டு, உயர் தரங்களுக்கமைவாக இந்த தயாரிப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

சாந்தனி பண்டாரவின் உயர்ந்த அனுபவம் மற்றும் அறிவைக் கொண்டு 4rever Skin Naturals தெரிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாரம்பரிய மூலப்பொருட்கள் மற்றும் முறைகள் ஆகியவற்றுடன் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சகல 4rever தயாரிப்புகளும் இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சந்தையில் காணப்படும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சரும பராமரிப்பு தயாரிப்புகளாக அமைந்துள்ளன. 

திருமதி சாந்தனி பண்டார தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், '4நஎநச தயாரிப்புகள் இலங்கையின் முன்னணி கூந்தல் மற்றும் சரும பராமரிப்பு வர்த்தக நாமமாக தெரிவாகியுள்ளமையிட்டு நாம் பெருமையடைகிறோம். எமது தயாரிப்புகளில் 70 க்கும் அதிகமான தெரிவுகள் உள்ளடங்கியுள்ளன. ஹிபிஸ்கஸ் எண்ணெய் என்பது, சிறந்த பெறுபேறுகளை வழங்கக்கூடியது என்பதுடன், வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்புகளில் தங்கியிருக்க முடியும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X