2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மக்கள் வங்கியின் பசுமையான வங்கி முறைமை

A.P.Mathan   / 2015 ஜூலை 13 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச வங்கித்துறையின் புதிய பரிமானங்களை எப்போதும் இலங்கையர்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் மக்கள் வங்கி, நவீனத்துவத்தின் மற்றுமொரு படிமுறையை முன்னெடுத்து வைக்கும் முகமாக, இந்நாட்டு இளம் சந்ததியினருக்குப் பசுமையான வங்கித்துறையின் கதவுகளைத் திறக்கிறது. இதற்கமைய, மக்கள் வங்கியின் Yes கணக்கு ஊடாக, பசுமையான வங்கித்துறையின் விசேடத்துவத்தை நீங்கள் இப்போது உணர்ந்து கொள்ளலாம். 

புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழிற்துறையின் வளர்ச்சி மூலம், வங்கி அலுவல்களில் ஈடுபடும் போது, சூழலுக்கு ஏற்படக் கூடிய தீங்குகளைக் குறைத்து, சூழலின் சமநிலையைப் பாதுகாக்கும் நோக்குடன், பசுமையான வங்கிச் சேவை என்ற எண்ணக்கரு உருவானது. இதன் விசேட வேலைத்திட்டம் ஒன்றின் கீழ், சமூக, சூழல் மற்றும் புவியியல் விடயங்களை சூழலுக்கு ஏற்ற வகையில் மேற்கொள்வது இங்கு இடம்பெறுகிறது. அதன் ஊடாக, வங்கிச் சேவை வழங்குநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களும், செயற்பாடுகளும், சூழலுக்குச் சாதகமான முறையில் கட்டியெழுப்பப்படுகிறது.

மக்கள் வங்கியின் Yes கணக்கு ஊடாக, இந்த பசுமையான வங்கிச் சேவை என்ற எண்ணக்கரு இலங்கை வங்கித்துறையில் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் முதல் தடவை இதுவாகும். இதன் ஊடாக, கணக்குப் புத்தகம் மற்றும் அச்சிடப்பட்ட வங்கிக் கூற்றுக்கள் இன்றி மின்னஞ்சல் வாயிலாக வங்கிக் கூற்றுக்கள் அனுப்பி வைக்கப்படும்.

அத்துடன், மக்கள் வங்கியின் Yes கணக்கு உரிமையாளர்களுக்கு, இலவசமாக பீப்பள்ஸ் மொபைல் பாங்கிங் மற்றும் பீப்பள்ஸ் நெற் இணையத்தள வங்கிச் சேவைகள் வழங்கப்படுவதன் காரணமாக, நாளின் எந்தவொரு வேளையிலும், எந்தவொரு இடத்திலிருந்தும், கையடக்கத் தொலைபேசி அல்லது கணினி மூலம் வங்கி அலுவல்களை மேற்கொள்ள முடியும். இந்த பீப்பள்ஸ் மொபைல் பாங்கிங் மற்றும் பீப்பள்ஸ் நெற் இணையத்தள வங்கிச் சேவை ஊடாக வங்கி நிலுவையைப் பரீட்சித்தல், ஏனைய விடயங்களை அறிந்து கொள்ளல், பணப் பரிமாற்றம், பில் கட்டணங்களைச் செலுத்துதல், வங்கிக் கூற்றுக்களைக் கோருதல் போன்ற பல சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மக்கள் வங்கியின் ‘Yes’ E கணக்கு உரிமையாளர்களுக்கு ஜுலை மாதம் 01ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை பீப்பள்ஸ் வீசா இன்டர்நஷனல் டெபிட் காட் மற்றும் கிரடிட் காட் என்பனவற்றை சேர்வுக் கட்டணம் இன்றி பெற்றுக்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. பீப்பள்ஸ் கிரடிட் காட் மூலம், இரவு பகலாகச் செயற்படும் மக்கள் வங்கியின் 450 க்கும் அதிகமான ATM இயந்திர வலையமைப்பு மற்றும் Lanka pay வலையமைப்புக்கு உரித்தான 2300 க்கும் அதிகமான ATM இயந்திரங்கள் மூலம் பணம் பெற்றுக்கொளளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, கணக்கிலுள்ள மீதிக்கு ஏற்ப, வர்த்தக நிலையங்கள் ஊடாகவும், கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியும். அத்துடன், மிகக்குறைந்த வருடாந்தக் கட்டணம் மற்றும் வட்டி வீதத்தைக் கொண்ட பீப்பள்ஸ் கிரடிட் காட்டைப் பயன்படுத்தியும் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்ய முடியும். 

இந்தப் பசுமையான வங்கி முறைமை பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள www.peoplesbank.lk என்ற இணைத்தளம் ஊடாக அல்லது www.facebook.peoples.bank.yes.account என்ற Yes பேஸ் புக் பக்கத்தினுள் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும். இன்றே Yes கணக்கு ஒன்றை ஆரம்பித்து, சூழலின் சமநிலையைப் பாதுகாத்து, திடமானதொரு எதிர்காலத்திற்கு வழிவகுக்குமாறு, மக்கள் வங்கி இலங்கையின் இளம் சந்ததியினருக்கு அழைப்பு விடுக்கிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X