2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நவம் மாவத்தையில் புதிய லங்கம் இல்லம்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனமானது இல.46/56, நவம் மாவத்தை, கொழும்பு 02 என்ற முகவரியில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத் தொகுதிக்கு அண்மையில் இடம் மாறியுள்ளது. 30,000 சதுரஅடி பரப்பளவு கொண்ட இப் புதிய அலுவலக கட்டிடத் தொகுதியானது, கம்பனிக்கு இலாபம் உழைத்துத் தரும் பல்வேறு செயற்பாட்டு நிலையங்களை ஒரே அமைவிடத்தில் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான வசதியை முதல் தடவையாக வழங்குகின்றது. 

கொழும்பின் வர்த்தக ரீதியான கேந்திர மையத்திற்கு நிறுவனத்தின் தொழிற்பாடுகளை இடம் மாற்றுவதற்;கு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, இலங்கையின் மிகப் பெரியதும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து செல்வதுமான கைத்தொழில்சார் கூட்டு நிறுவனமாக திகழும் லங்கம் தனது தோற்றப்பாட்டை மேலும் பலப்படுத்துவதற்கு உதவியாக அமையும். 

குழுமத்தின் வணிகப் பிரிவுகளானது - பயிர் பாதுகாப்பு, வர்ணப்பூச்சுக்கள்,  கைத்தொழில், கனிப்பொருள், நுகர்வோர் மற்றும் அதனது ஆதரவுச் சேவைகள் பிரிவுகளாக காணப்படும் தகவல் தொழில்நுட்பம், மனிதவளம், வணிகம், நிதி, இணக்கப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இப் பிரிவுகளில் மொத்தமாக கடமையாற்றும் 300 ஊழியர்களும் தற்போது புதிய கட்டிடத் தொகுதியினுள் இருந்தவாறே பணியாற்றுகின்றனர். மேலும் இரு துணை நிறுவனங்களின் தொழிற்பாடுகளும் இந்த இடத்திற்கு மாற்றியமைக்கப்படவுள்ளது.

'பல்வகை கூட்டுநிறுவன துறையிலே மிக வேகமாக முன்னேறிச் செல்லும் ஒரு செயற்பாட்டாளராக லங்கெம் சிலோன் பி.எல்.சி. காணப்படுகின்றது. லங்கெம் குடும்பம் ஆனது இலங்கையில் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பெறுமதியை கட்டியெழுப்பியுள்ளதுடன், செல்வத்தையும் உருவாக்கியிருக்கின்றது. முக்கியமான ஒன்பது கைத்தொழில் துறைகளில் செயலாற்றும் இருபத்தைந்து துணை நிறுவனங்களை உள்ளடக்கியதாக அதனது முதலீடுகள் பரந்துபட்டுக் காணப்படுகின்றன. அந்த வகையில் நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கும் துறைகளில் முன்னணியில் திகழ்வதற்காக துணை நிறுவனங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன' என்று லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அனுஸ்மன் ராஜரத்னம் தெரிவித்தார். 

லங்கெம் ஆனது 1964ஆம் ஆண்டு 'ரோயல் டச் ஷெல்' இனால் ஒரு விவசாய இரசாயன வர்த்தக நிறுவனமாக உருவாக்கப்பட்டது. கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக அதனுடன் தொடர்புபட்ட ஏனைய பல வர்த்தக துறைகளுக்குள் நுழைந்ததன் மூலம் லங்கெம் தனது வர்த்தகத்தை பல்வகைப்படுத்தி இருக்கின்றது. லங்கெம் நிறுவனத்தின் பயிர் பாதுகாப்பு, உற்பத்திகள், வர்ணப்பூச்சு (பெயின்ட்) வகைகள் மற்றும் கனிப்பொருள் உற்பத்திகள் போன்றவை சம்பந்தப்பட்ட கைத்தொழில் துறைகளில் முன்னணி வகிக்கும் புதிய உற்பத்தி உருவாக்கங்களாக காணப்படுகின்றன. 

லங்கெம் நுகர்வோர் உற்பத்திகள் பிரிவானது நுளம்புச் சுருள்கள், சலவை இயந்திரங்களுக்கான சலவைத் தூள்கள் மற்றும் திரவ வடிவிலான சலவை உற்பத்திகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் இலங்கையில் முன்னோடியாக திகழ்கின்றது. இன்று லங்கெம் நுகர்வோர் உற்பத்திகள் அனைத்தும் நாடு முழுவதிலும் உள்ள வீடுகளில் பயன்படுத்தப்படும் வர்த்தக நாமமாக காணப்படுகின்றது. 

2010ஆம் ஆண்டு சி.டபள்யூ. மெக்கி நிறுவனத்தை கையகப்படுத்தியதன் ஊடாக FMCG துறையிலான தனது பிரசன்னத்தை லங்கெம் மேலும் பலப்படுத்தியது. கம்பனி பெருந்தோட்ட துறையின் ஊடாக உற்பத்தி செய்யப்பட்ட தனது முதற்தர இறப்பர் உற்பத்திகளுக்கான இறப்பர் பதப்படுத்தல் நிபுணத்துவம் மற்றும் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனைய நிறுவன ஒன்றிணைப்பு மற்றும் கையப்படுத்தல் நடவடிக்கைகளுள் - ஜே.எஃப். பெக்கேஜிங் (இலங்கையின் நெகிழ்வுத் தன்மையுள்ள பொதியிடல் துறையில் ஒரு முன்னோடி நிறுவனம்), யூனியன் கொமோடிற்றீஸ் (தேயிலை தரகர்கள்) மற்றும் சிலோன் டேப்ஸ் போன்றன உள்ளடங்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X