2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இடம்மாறியுள்ள கொமர்ஷல் வங்கியின் பலாங்கொடை கிளை

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி  அதற்கு சொந்தமான கிளைக் கட்டிடங்களில் சுற்றாடலுக்கு இசைவான புதிய மாதிரி கட்டிடங்களை உருவாக்கி வருகின்றது. நாம் வாழும் இந்த பூமியின் தேவைகளுக்கு ஏற்ப தனது செயற்பாடுகளை மாற்றும் திட்டத்தின் ஒரு அங்;கமாக இது இடம்பெறுகின்றது.

சக்திவள ஆற்றல் கொண்ட இத்தகைய புதிய கட்டிடங்களில் முதலாவது கட்டிடம் அண்மையில் செயற்படத் தொடங்கியுள்ளது. கொமர்ஷல் வங்கி அதன் பலாங்கொடை கிளையை தனக்கு சொந்தமான புதிய கட்டிடத்துக்கு இடம் மாற்றியுள்ளதன் மூலம் சாத்தியமாகியுள்ளது. 2015 ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை முதல் இந்தப் புதிய கிளை இலக்கம் 195 இரத்தினபுரி வீதி பலாங்கொடை என்ற முகவரிக்கு இடம் மாறியுள்ளது.

இரண்டு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடம் சுற்றாடலுக்கு இசைவான பல அம்;சங்களைக் கொண்ட கட்டிட வடிவமைப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மீள் சுற்று சக்தி ஆற்றல் கொண்ட சூரிய சக்தி பேழைகள், இயற்கை ஒளியை ஆகக் கூடிய அளவில் பாவிக்கக் கூடிய நிரந்தர கண்ணாடிகள் பொருத்தப்பட்ட யன்னல்கள், உஷ்ண எதிர்ப்பு கருவிகள் சக்தி சேமிப்பு கருவிகள் என பல வசதிகள் இங்கு எற்படுத்தப்பட்டுள்ளன.

பசுமை வங்கி ஊக்குவிப்புத் திட்டத்தை வங்கி தற்போது மிகத் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது. அதற்கான ஒரு உதாரணமாகவே இந்தப் புதிய கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. வங்கி பல இடங்களில் அதன் கிளைகளை தனது சொந்த கட்டிடங்களுக்கு துரிதமாக மாற்றி வருகின்றது. அந்தப் புதிய கட்டிடங்களில் இனிவரும் காலங்களில் இந்த இயற்கைக்கு சாதகமான முறையும் பின்பற்றப்படும்.

இடம்மாற்றம் செய்யப்பட்ட புதிய பலாங்கொடை கிளையை வங்கியின முகாமைத்துவப் பணிப்பாளரும்; பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம் திறந்து வைத்தார். வங்கியின் பலாங்கொடை பிரதேச பெறுமதிமிக்க வாடிக்கையாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், கூட்டாண்மை முகாமைத்துவ பிரதிநிதிகள், வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பெருந்திரளானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த புதிய கிளை கட்டிடத்தில் மூன்று ATM இயந்திரங்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதியும் இங்கு உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X