2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மேலும் 160 சாதனையாளர்களைத் தேடத் தொடங்கியுள்ள செலிங்கோ லைஃப்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த தொகுதி பிரணாம புலமைப்பரிசில் வழங்குவதற்கான சாதனையாளர்களின் தேடல் தொடங்கியுள்ளது. இலங்கையில் ஆயுள் காப்புறுதித் துறையில் தலைமை தாங்கும் நிறுவனமான செலிங்கோ லைஃப் இந்த புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றது. 2016ல் 15வது வருடமாக வழங்கப்படவுள்ள இந்தப் புலமைப்பரிசிலில் சில பிரிவுகளுக்கான கொடுப்பனவு தொகை அதிகரிக்கப்படவுள்ளதாக கம்பனி அறிவித்துள்ளது.

நான்கு பிரிவுகளைக் கொண்ட இந்த புலமைப் பரிசிலின் அடுத்த கட்டத்துக்கான விண்ணப்பச் சேகரிப்பு தற்போது தொடங்கியுள்ளது. நவம்பர் மாதம் 30ம் திகதி வரை இது தொடரும் என கம்பனி அறிவித்துள்ளது.

செலிங்கோ லைஃப் ஆயுள் காப்புறுதி யாளர்களின் பிள்ளைகள் மத்தியில் சாதனையாளர்களையும் சிறந்த  கல்வித் தகைமை பெறுபவர்களையும் அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் இது வழங்கப்படுகின்றது. மாவட்ட ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலில் கூடிய புள்ளிகளைப் பெறுபவர்கள், அதேபோல் க.பொ.த சாஃத மற்றும் உயர் தரங்களில் சாதனை படைப்பவர்கள், தேசிய மட்டத்தில் விளையாட்டு, கலை, கலாசாரம், நாடகம் மற்றும் புத்தாக்க கண்டு பிடிப்புக்களில் சாதனை படைத்தவர்களும் இவ்வாறு கௌரவிக்கப்படுகின்றனர்.

தனது வாடிக்கையாளர்களின் பிள்ளைகளுள் க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெறுகின்றவர்களையும் கம்பனி பண பரிசு வழங்கி கௌரவிக்கின்றது.

இவ்வாண்டு முதல் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்து சாதனை படைக்கும் மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்கவும் கம்பனி தீர்மானித்துள்ளது.
அதேபோல் க.பொ.த சாதாரண மற்றும் உயர் தரத்தில் சித்தி அடைந்தவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவும் அதிகரிக்கப்படவுள்ளது.

இவ்வாண்டு முற்பகுதியில் வழங்கப்பட்ட பிரணாம புலமைப்பரிசில்களில் உயர்தரத்தில் மாவட்ட ரீதியாக இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்று சாதனை படைத்தவர்களுக்கான ஒரே தடவையிலான பணக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது.

'கடந்த 14 வருடங்களில் பிரணாம புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 1924 பேருக்கு ஒட்டு மொத்தமாக 100 மில்லியன் ரூபா புலமைப்பரிசிலாக வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர் மீதான அதிகரித்து வரும் சுமையைக் கருத்திற் கொண்டு இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த கட்டமாக வழங்கப்படவுள்ள 160 புலமைப்பரிசில்களின் தொகையையும் நாம் அதிகரித்துள்ளோம்' என்றார்.

செலிங்கொ லைஃப் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. ஆர். ரெங்கநாதன் அவர்கள் நாடு முழுவதும் உள்ள செலிங்கோ லைஃப் கிளைகளில் அடுத்த சுற்று பிரணாம புலமைப்பரிசில்களை பெறத் தகுதியானவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

செலிங்கொ லைஃப் வாடிக்கையாளர்கள் அனுபவித்து வரும் பல்வேறு நன்மைகளுள் பிரணாம திட்டம் கம்பனி கல்விக்கு அளித்து வருகின்ற முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. செலிங்கோ லைஃப் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வெகுமதி திட்டத்தில் இது பிரதான இடம் பிடிக்கின்றது.

இலங்கையின் மிகச் சிறந்த வர்த்தக முத்திரைகளுள் ஒன்றாக சுயாதீனமான முறைகளில் தெரிவு செய்யப்பட்டுள்ள செலிங்கோ லைஃப் 2004 முதல் நாட்டின் நீண்டகால காப்புறுதித் துறையில் தலைமை தாங்கும் நிறுவனமாகத் திகழ்கின்றது. உள்ளுர் ஆயுள் காப்புறுதி கம்பனிகளுள் மிகப் பெரிய கிளை வலையமைப்பையும் அது கொண்டுள்ளது. வர்த்தக சமநிலையை பேணுதல் மற்றும் சமூக ரீதியான அர்ப்பணம் என்பனவற்றுக்காக இந்த நிறுவனம் உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் பல விருதுகளையும் வென்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X