Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 06 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சியபத பினான்ஸ், சம்பத் வங்கி குழுமத்தின் மிகப் பெரிய ஒரு துணை நிறுவனமாகும். அது, 2017 ஆம் ஆண்டுக்கான தனது நிதிப் பெறுபேறுகளை மிகவும் பெருமையுடன் அண்மையில் வெளியிட்டுள்ளது.
குறித்த ஆண்டில், சியபத பினான்ஸ் நிறுவனம் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளதோடு, இத்துறையில், அதன் சகல பிரிவுகளிலும் முன்னணி நிலையில் திகழ்ந்துள்ளது.
நிதித்துறையில் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைந்து, நாட்டின் முன்னணி நிதி நிறுவனமொன்றாக மாறியுள்ளது.
சியபத பினான்ஸ் நிறுவனம், 2017 ஆம் ஆண்டின் நிதிப் பெறுபேறுகளுக்கு அமைய, வரிகளுக்கு பிந்திய இலாபமாக ரூபாய் 498.86 மில்லியனைப் பதிவு செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டின் ரூபாய் 327.28 மில்லியனுடன் ஒப்பிடுகையில் அது, 52 சதவீதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகக் காணப்படுகின்றது.
மொத்த வருமானத்தின் கீழ், நிறுவனத்தின் மொத்த வட்டி வருமானம், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 62% வளர்ச்சியுடன் 4.6 பில்லியன் ரூபாயாக 2017 ஆம் ஆண்டில் பதிவாகியது. வியாபார நடவடிக்கைகளில் வளர்ச்சி காணப்பட்டதோடு, லீசிங், கடன் வசதிகள் ஆகிய வர்த்தகங்களில் ஏற்பட்ட இடரைச் சிறப்பாகப் பேணி செயற்பட்டதால், வருமானமும் சிறந்த பெறுபேறுகளும் சாத்தியமாக அமைந்தன.
நிகர வட்டி வருமான வளர்ச்சியும் நிகர கட்டணங்கள், தரகு வருமான வளர்ச்சியும் இலாப வளர்ச்சிக்குப் பிரதான காரணமாக அமைந்திருந்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017 ஆம் ஆண்டில் நிகர வட்டி வருமானம் 51% வளர்ச்சியை, அதாவது, 1.84 பில்லியன் ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டில் அது 1.22 பில்லியனாகக் காணப்பட்டது.
மேலும், இந்த அதிகரித்த இலாபம் காரணமாக, சொத்துகள் மீதான வருமானம் (ROA) 1.91% ஆகவும், மூலதனத்தின் மீதான வரவு (ROE) 23.05% ஆகவும் அமைந்திருந்தன. கடந்த ஆண்டுகளில் இவை 1.81% மற்றும் 18.35% ஆகக் காணப்பட்டன.
2017 ஆம் ஆண்டில், மிக முக்கியமான ஒரு மைல்கல்லை நிறுவனம் அடைந்து கொண்டுள்ளது. அதன் மொத்தச் சொத்துகளின் பெறுமதி ரூபாய் 29.81 பில்லியனாகும். இது, 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 43% வளர்ச்சியாகும்.
கடந்த ஐந்து வருடங்களில் மொத்தமாக 33% சராசரி வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. நிறுவனம், அதன் முற்பண தொகுதிகளில் சாதாரண சராசரியையும் தாண்டி, 2017 ஆம் ஆண்டில் நிலவிய வர்த்தக சவால்களுக்கு மத்தியில், வளர்ச்சியை அடைந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்த நிதிப் பெறுபேறுகள் பற்றி, சியபத பினான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சன்ன பலன்சூரிய கூறுகையில், “நிறுவனத்தின் நிதிப் பெறுபேறுகளைக் கண்டு நாம் பெரும் மகிழ்ச்சியடைவதோடு, எமது கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளமை, இதன் மூலம் தெளிவாகிறது. நாம் மேற்கொண்டுள்ள மாற்றங்களும் புதிய அறிமுகங்களும், எமக்குச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளதோடு, சியபத பினான்ஸ் தொடர்ந்தும் பெறுபேறுகளிலும் நவீனத்துவத்திலும் வாடிக்கையாளர் சேவையிலும் சிறந்து விளங்கும் என்பதை உறுதிப்படுத்துகிறேன். நாம் புதிதாக இணைத்த பல்வேறு படைப்புகள் பலனளித்துள்ளன.
மேலும், நிதிப் பெறுபேறுகளும் புதிய படைப்புகளும் வாடிக்கையாளர் சேவையை மேலும் அதிகரிக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்” என்று அவர் கூறினார்.
சியபத பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமன் ஹேரத் கருத்து வெளியிடுகையில், “சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளைக் கண்டு நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். விசேடமாக, வைப்புகளின் 178% வளர்ச்சி மற்றும் பங்குதாரர் நிதியின் வளர்ச்சி என்பன பெருமைப்படக் கூடிய விடயங்களாகும். சியபத பினான்ஸ் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது. வாடிக்கையாளர்களின் மூலமே நிறுவனத்தின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுகிறது என்பது எனது நம்பிக்கையாகும். அதை எப்போதும் சிறப்பாக நிலைநாட்டுவதே வளர்ச்சியின் இரகசியமாகும்” என்று கூறினார்.
4 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
2 hours ago