Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2020 மே 07 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கடந்த ஆண்டில் 1.2 பில்லியன் டொலர்களாக மாத்திரம் பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை போன்றன காரணமாக நாட்டுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைக்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் இலங்கையின் முதல் ஐந்து வெளிநாட்டு நேரடி முதலீடுகளை மேற்கொண்ட நாடுகளில் இந்தியா, சிங்கப்பூர், கனடா, ஹொங்கொங் மற்றும் சீனா ஆகியன அடங்கியிருந்தன. எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் ஹம்பாந்தோட்டை தொழிற்பேட்டை, கொழும்பு போர்ட் சிட்டி, ஹோட்டல்கள் துறை மற்றும் கலப்பு அபிவிருத்தித் துறை போன்றன முக்கிய பங்கை கொண்டிருக்கும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
துறைகளின் பிரகாரம், பெறப்பட்ட பாரிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் துறைமுக உட்கட்டமைப்பு, சொத்துக்கள் அபிவிருத்தி மற்றும் ஹோட்டல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறை ஆகியன அடங்கியிருந்தன.
தொலைத் தொடர்பாடல் துறையிலும் குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைத்திருந்தன. குறிப்பாக, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையை இலக்காகக் கொண்டு இவை அமைந்திருந்தன.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவர்வதற்கு மூலோபாய செயற்திட்ட அபிவிருத்தி சட்டத்தை (SPDA) அமல்படுத்துவது மற்றும் வரி கட்டமைப்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுகள் போன்றன ஏதுவான காரணிகளாக அமைந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நாட்டில் நிலவும் உயர் சம்பள வீதங்கள் மற்றும் மூலப்பொருட்கள் செலவு, காணியை பெற்றுக் கொள்வதில் காணப்படும் உயர் செலவு, ஊழியர் சட்டவிதிமுறைகளின் கடுமையான நிலைப்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் விதிமுறைகள் போன்றன வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதில் பெரும் சவால்களாக அமைந்திருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் அடங்கலாக, மொத்த வெளிநாட்டு முதலீடுகள் கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்திருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை முதலீட்டு நிறுவனங்கள் பெற்றுக் கொண்ட வெளிநாட்டு கடன்கள் அடங்கலான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 1,204 மில்லியன் டொலர்களாக கடந்த ஆண்டில் பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் இந்தப் பெறுமதி 2,139 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது. (அரசாங்கத்தினால் பெறப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை பெறுமதியான 1,457 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தவிர்ந்தவை) 2017 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதி 1,910 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வீழ்ச்சியடைந்ததில் அரசியல் ஸ்திரமற்ற நிலை மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் போன்றன காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் இலங்கையின் பொருளாதாரச் சூழல் பற்றி உறுதியற்ற நிலை தோன்றியிருக்கக்கூடும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2019 ஆம் ஆண்டில் இலங்கை முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு கிடைத்திருந்த வெளிநாட்டு கடன்கள் தவிர்ந்த, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 758 மில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்தது. இதில் 374 மில்லியன் டொலர்கள் தேறிய நிறுவனங்களுக்கிடையிலான கடன், 264 மில்லியன் டொலர்கள் மீளமுதலீடு செய்யப்பட்ட வருமதிகள் மற்றும் 120 மில்லியன் டொலர்கள் பங்குகள் மீதான முதலீடுகளாக அமைந்திருந்தன.
2018 ஆம் ஆண்டில் இலங்கை முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பெற்றுக் கொண்ட வெளிநாட்டு கடன்கள் தவிர்ந்த வெளிநாட்டு நேரடி முதலீடு 1,614 மில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
32 minute ago
33 minute ago