2026 மே 02, சனிக்கிழமை

2031இல் அணு மின்உற்பத்திக்கு திட்டமிடும் இலங்கை

Menaka Mookandi   / 2014 ஜூன் 05 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் 2031ஆம் ஆண்டளவில் அணுமின்சாரத்தை உற்பத்தி செய்து, நாட்டின் மின்சாரத் தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நீண்ட கால மின் உற்பத்தி கொள்ளளவு தொடர்பில் மின்சார சபை மேற்கொண்டிருந்த ஆய்வில் இந்த வாய்ப்புகள் காணப்படுவது குறித்து ஆராய்திருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய கட்டமைப்பின் கொள்ளளவு என்பது அணு மின் கட்டமைப்பொன்றை உள்வாங்குவதற்கு போதியளவில் காணப்படாத போதிலும் அணு மின் உற்பத்தி தொடர்பில் கவனம் செலுத்துவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .