2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

4G வலையமைப்பு பலப்படுத்தல்

S.Sekar   / 2022 மே 06 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

3G டேட்டா சேவைகளை நிறுத்துவதன் மூலம் கூடுதல் LTE அலைவரிசை மற்றும் திறன்களுடன் தனது வலையமைப்பை மேம்படுத்துவதாக Airtel Lanka அறிவித்துள்ளது. இது Airtel Lankaவின் 4G/5G சேவைகளை மேம்படுத்தவும் அதிகரிக்கவும் வாய்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளது. இது பாவனையாளர்களுக்கு வேகமான, நிலையான வலையமைப்பு அனுபவத்தை வழங்கும். இந்த முயற்சியானது டேட்டா வேகத்தை 50% வரை அதிகரிக்கும் என்பதோடு வலையமைப்பு நெரிசலை வெகுவாகக் குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

3G டேட்டா சேவைகள் ஜூன் 24, 2022 முதல் நிறுத்தப்படவுள்ளது. எனினும், எயார்டெல் நிறுவனமானது அதன் 2G வலையமைப்பு தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் 2G, 3G வாடிக்கையாளர்கள் உட்பட அனைத்து பயனர்களும் voice, text சேவைகளை தடையின்றி அணுகலாம்.

மேலும், கணிசமான எண்ணிக்கையிலான பாவனையாளர்கள் ஏற்கனவே 4G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் பலன்களை அனுபவித்து வருவதாக எயார்டெல் உறுதிப்படுத்துகிறது. 3G மட்டும் பயன்படுத்தும் பயனர்களை 4G வலையமைப்புக்கு மேம்படுத்த எயார்டெல் நிறுவனம் ஊக்கப்படுத்துகிறது. இதற்காக முன்னணி விற்பனையாளர்களுடன் கூட்டு சேர்ந்து அனைத்து விலைத் தரங்களிலும் 4G தரத்திலான சாதனங்களை, மலிவு விலையில் வழங்க எயார்டெல் முன்வந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .