2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

54 மேர்சடீஸ் சொகுசு கார்கள் மீள விற்பனை

A.P.Mathan   / 2014 மே 19 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் இடம்பெற்ற CHOGM நிகழ்வுக்காக இறக்குமதி செய்யப்பட்டிருந்த 54 மேர்சடீஸ் பென்ஸ் S 400 class ஹைபிரிட் கார்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டீசல் அன்ட் மோட்டர்ஸ் என்ஜினியரிங் பிஎல்சி அறிவித்துள்ளது.

இந்த சகல கார்களையும் தனிநபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக கம்பனியின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே அறிவித்திருந்தார்.

கொள்வனவில் ஈடுபட்டவர்கள் குறித்த வாகனங்களுக்குரிய கொடுப்பனவுகளை இலங்கை வங்கி கணக்குக்கு மேற்கொண்டுள்ளதாகவும், சுங்க தீர்வை பத்திரங்கள் மற்றும் விடுவிக்கும் ஆவணங்களை வாடிக்கையாளர்களின் பெயருக்கு வழங்கியுள்ளதாகவும் கம்பனி அறிவித்துள்ளது.

நிதி அமைச்சின் மூலம் இறக்குமதி செய்யப்பட்டிருந்த இந்த வாகனங்களை மீள விற்பனை செய்யும் பொறுப்பை டீசல் அன்ட் மோட்டர்ஸ் என்ஜினியரிங் பிஎல்சி நிறுவனத்துக்கு அமைச்சு வழங்கியிருந்தது. இதன் பிரகாரம், குறித்த வாகனங்களை விற்பனை செய்துள்ளதுடன், 13.75 மில்லியன் ரூபாவை இந்த விற்பனை இணைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக கம்பனிக்கு அமைச்சு வழங்கியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .