2025 மே 21, புதன்கிழமை

60 வருடப் பூர்த்தியில் ஃபொடோ டெக்னிகா

Editorial   / 2018 மே 13 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஃபொடோ டெக்னிகா, தனது 60ஆவது வருடப் பூர்த்தியை, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில், அண்மையில் கொண்டாடியது. புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான ஃபிரெடி மல்வென்னவால், 1958ஆம் ஆண்டில், ஃபொடோ டெக்னிகா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், 60ஆவது வருடப் பூர்த்தி நிகழ்வில், நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்கள், நாடு முழுவதிலும் காணப்படும் அங்கிகாரம் பெற்ற விற்பனை அதிகாரிகள், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்கள் அடங்கலாக, விசேட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஃபொடோ டெக்னிகா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹர்ஷ மல்வன்ன, அந்நிறுவனத்தின் கடந்த காலம், நிகழ்கால மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றிக் குறிப்பிடுகையில், 
“எமது 60ஆவது வருடப் பூர்த்திக் கொண்டாட்டங்களில் பங்கேற்றமைக்கா,க உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புகைப்படக் கலை தொடர்பில், பெருமளவு அக்கறையும் ஈடுபாடும் காண்பித்திருந்த புகைப்படக் கலைஞரான மறைந்த எனது தந்தை ஃபிரெடி மல்வென்ன, தெளிவான முன்நோக்கிய நோக்கத்துடன், 1958ஆம் ஆண்டில், இதுபோன்ற ஒரு நாளில் தான், ஃபொடோ டெக்னிகாவை ஆரம்பித்தார். அன்று முதல் இன்று வரை, ஃபொடோ டெக்னிகாவின் வியாபாரப் பயணம், இனிதே முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் பயணத்தில், நாம் பல சவால்களையும் தடைகளையும் வெற்றிகரமாகக் கடந்துவந்துள்ளோம். புகைப்படத்துறையில், உலகில் மாறி வரும் புதிய தொழில்நுட்பங்கள், இலங்கையில் அறிமுகம் செய்திருந்ததன் மூலமாக, நாம் புகைப்படத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினோம். 1958இல் உருவாக்கிய வலுவான காட்சி மற்றும் உறுதிமொழி, பெறுமதி, நற்செயற்பாடுகள், வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் போன்றன, எமது வெற்றிகரமான இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையானதாக அமைந்துள்ளன. இரண்டாவது தலைமுறை எனும் வகையில், நாம் கடந்த காலத்தை விட எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம். தற்போது நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் புகைப்பட முறை, எதிர்வரும் தசாப்தத்தில், கணினி மயமாக்கலுடனான தொழில்நுட்பத்தினூடாக, ரொபோ தொழில்நுட்பம் வரை வளர்ச்சியடையும். இலங்கைப் புகைப்படத் துறையின் முன்னோடிகள் என்ற வகையில், நாம் இதற்குத் தயாராக வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .