Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 19 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சைனீஸ் ட்ராகன் கபே பிரைவட் லிமிட்டெட், தனது 75 வருட பூர்த்தியை முன்னிட்டு பல சமூகப்பொறுப்புணர்வு மற்றும் சமய நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தது.
சைனீஸ் ட்ராகன் கபே முகாமைத்துவ பணிப்பாளர் நைஷாட் உதேஷி மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் ஆகியோர் பம்பலப்பிட்டி உணவகத்தில் நடைபெற்ற சமய நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர்.
‘நினைவிருக்கும் உணவு வேளை’ எனும் தொனிப்பொருளில் தனது சமூகப்பொறுப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சைனீஸ் ட்ராகன் கபே, பிரீத்திபுர சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கியிருந்ததுடன், ஹெந்தளையைச் சேர்ந்த குழந்தைகள் இல்லத்துக்கு பால்மா விநியோகத்தையும் மேற்கொண்டிருந்தது.
280, கனல் வீதி, ஹெந்தளை, வத்தளை எனும் முகவரியில் அமைந்துள்ள சைனீஸ் ட்ராகன் கபே தலைமையகத்தில் சகல ஊழியர்களுக்குமான ஒன்றுகூடல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
10 முதல் 20 வருட கால சேவையை பூர்த்தி செய்திருந்த ஊழியர்களுக்குக் கௌரவிப்புகள், நினைவுச்சின்னங்கள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசுகள் போன்றன வழங்கப்பட்டிருந்தன.
ஐந்து முதல் 10 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், சகல ஊழியர்களுக்கும் 75 வருட பூர்த்தி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டிருந்தது.
சைனீஸ் ட்ராகன் கபே முகாமைத்துவ பணிப்பாளர் நைஷாட் உதேஷி இதுகுறித்துத் தெரிவிக்கையில், “நாட்டின் முன்னணி சீன உணவகம் எனும் வகையில், 75 ஆண்டுகளாக நாம் இயங்கி வருகிறோம்.
இக்காலப்பகுதியில் பல புகழ்பெற்ற உணவகங்கள் உணவுத்தரங்களைப் பேணாமை மற்றும் மக்களின் வாழ்க்கை முறைக்கமையத் தம்மை மாற்றிக்கொள்ளாமை போன்ற காரணங்களினால் காணாமல் போய்விட்டன.
ஆனாலும் பல தசாப்த காலமாக சைனீஸ் ட்ராகன் கபே மக்களுடன் தனது நெருங்கிய உறவைப் பேணி வருகிறது.
நகர்ப் பகுதியைச் சேர்ந்த மக்களின் விருப்பத்துக்குரிய சீன உணவகமாக, பல தசாப்த காலமாக நாம் திகழ்வதுடன், எமது வாடிக்கையாளர்கள், உணவுத்தரம் மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களின் பங்களிப்பு இந்த நிலையை தொடர்ந்து பேண ஏதுவாக அமைந்துள்ளது” என்றார்.
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago