2025 மே 21, புதன்கிழமை

ATM பண விநியோகத்தில் கொமர்ஷல் வங்கி சாதனை

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

  பண்டிகைக்கு முந்திய கால தினங்களான ஏப்ரல் 10, 11ஆம் திகதிகளில் கொமர்ஷல் வங்கியின் ATM இயந்திர வலையமைப்பின் ஊடாக, 6.179 பில்லியன் ரூபாய் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 24 மணிநேரத்தில் ஆகக் கூடிய தொகைகளை விநியோகித்து சாதனை படைத்துள்ளதோடு, இலங்கையர்கள் புத்தாண்டு பண்டிகை கால முன்னேற்பாடுகளில் ஈடுபடவும் கொமர்ஷல் வங்கி உதவியுள்ளது.  

ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி 3.166 பில்லியன் ரூபாயும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி 3.013 பில்லியன் ரூபாயும் ஆகக் கூடிய தொகைகளாக விநியோகிக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி 2.79 பில்லியன் ரூபாயை விநியோகித்து வங்கி நிலைநாட்டிய சாதனையை, தற்போது முறியடித்துள்ளது. 

மொத்தமாக ஏப்ரல் முதலாம் திகதி முதல், 13ஆம் திகதி வரை, கொமர்ஷல் வங்கி ATM வலையமைப்பின் ஊடாக 27.373 பில்லியன் ரூபாய் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது, சராசரியாக ஒரு நாளைக்கு 2.1 பில்லியன் ரூபாயாகும்.

இலங்கையர்களின் அன்றாட வாழ்வில் கொமர்ஷல் வங்கி வகித்து வரும் அத்தியாவசியமான பங்களிப்பு, இதன் மூலம் மீள் உறுதி செய்யப்பட்டுள்ளது. வங்கியின் வலையமைப்பின் நம்பகத்தன்மை, துரித செயற்பாடு என்பனவும் மீள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 13 தினங்களில் 5 தினங்களில் வங்கியின் ATM வலையமைப்பு தினசரி 2.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை விநியோகித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .