2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

Aniwa.lkவுக்கு லங்கன் ஏஞ்சல்ஸ் அனுசரணை

Gavitha   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கள மொழியில் காணப்படும் இணைய தளத்தில் Aniwa.lkஇன் தாக்கம் விரிவுபடுத்தப்படும் நிலையில், சந்தைப்படுத்துநர்கள் அதிகளவு வரவேற்பைக் காண்பித்துள்ளனர். இவற்றைக் கவனத்திற் கொண்ட லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க், இந்த நிறுவனத்தில் தனது முதலீடுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

இலங்கையின் ஆரம்ப நிலை நிறுவனங்களை இனங்கண்டு அவற்றுக்கு முதலீடுகளைப் பெற்றுக்கொடுத்து, பெருமளவு வளர்ச்சி மற்றும் இலாபத்தை ஈட்டிக்கொள்ளக்கூடிய வசதியை லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க் மேற்கொண்டு வருகிறது. Aniwa.lk இதற்கு பொருத்தமானதாக அமைந்துள்ளது.

Aniwa.lkஇன் இணை ஸ்தாபகர் அனிஷ யசரட்ன கருத்துத்தெரிவிக்கையில், “நாம் எமது செயற்பாடுகளை ஆரம்பித்து 10 மாதங்களின் பின்னர், இலங்கையில் Alexa.com இணையத்தளத்தின் தரப்படுத்தலில் 85ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டு உள்ளோம் அத்துடன், உள்நாட்டிலிருந்து செயற்படுத்தப்படும் உள்ளடக்க இணையத்தளங்களில் முதல் 30 இடங்களில் அமைந்துள்ளது.Aniwa.lkஇனால் தற்போது 140 ஆக்கங்கள் மற்றும் வீடியோக்கள் மாதமொன்றில் வெளியிடப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து மாதமொன்றுக்கு சுமார் 8,000,000க்கும் அதிகமான பார்வையாளர்களையும், 625,000  பாவனையாளர்களையும் ஈர்த்த வண்ணமுள்ளது.

இந்த இணையத்தளத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தும் பாவனையாளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஸ்மார்ட்-போன்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும், Aniwa.lk பக்கத்தின் 84%க்கும் அதிகமான பார்வையாளர்கள் 18-44 வயதுக்குட்பட்டவர்களாக அமைந்துள்ளனர். சுமார் 40 சதவீதமானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X