Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை, கொழும்பு BMICHஇல் நடைபெறும் செலான் சிஹின நிவாஹன - Art of Living exhibition 2016 உடன், செலான் வங்கி பிரதான மற்றும் பிரத்தியேக அனுசரணையாளராக இணைந்துள்ளது.
Asia Exhibition and Conventions (Pvt) Ltd இனால் ஏற்பாடு செய்யப்படும் இக்கண்காட்சியில் வீட்டுப் பாவனைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், தளபாடங்கள், உட்புற வடிவமைப்பு என்பவை உள்ளடங்கலாக, 200க்கும் மேற்பட்ட கூடங்கள் காணப்படும். தமது வாடிக்கையாளரின் கனவு இல்லத்தைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் வங்கியான செலான் வங்கியின் “சிரி நிவச” வீட்டுக்கடன் திட்டமும் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதன்போது குறிப்பிட்ட காலத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.
வாடிக்கையாளரை மையப்படுத்திய வங்கியாக செலான் வங்கியின் “சிரி நிவச” வீட்டுக் கடன் திட்டம், அவர்களின் சொந்த வீட்டுக்கானக் கனவை நனவாக்குகின்றது. இக்கடன் மூலம் வீடொன்றைக் கொள்வனவு செய்யவும், கட்டுவதற்கும், காணியொன்றைக் கொள்வனவு செய்யவும், புனரமைக்கவும் அடுக்குமனைக் குடியிறுப்பு ஒன்றைக் கொள்வனவு செய்யவும், தற்போதுள்ள வீட்டுக் கடனை அடைக்கவும், தளபாடம், உட்புற வடிவமைப்பு மற்றும் வீடு சார் அழகுபடுத்தும் கருமங்களுக்காகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
இக்கண்காட்சியின் போது, செலான் “சிரி நிவச” வீட்டுக் கடன் திட்டம் குறிப்பிட்டக் காலப்பகுதிக்கு சிறப்பு வட்டி வீதங்களை வழங்கத் தயாராகவுள்ளது.
மாதாந்த சம்பளத்தைப் பெறுவோர் அல்லது சுய தொழில் புரியும் நிலையான வருமானம் உடையோர் இக்கடனைப் பெறலாம். மேலும் வர்த்தகர்கள், தொழில் நிபுணர்கள், வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள் மற்றும் கூட்டுக் கடன் பெறுநர்கள் (கணவன்,மனைவி, 18 வயதுக்கு மேற்பட்ட மகன், மகள் உடைய பெற்றோர்) ஆகியோர் அவர்களின் வேறுபட்ட தேவைகளுக்கேற்ப இக்கடனைப் பெறலாம். ரூ.100,000 தொடக்கம் ரூ.50 மில்லியன் வரை விண்ணப்பதாரரின் மீள்செலுத்தும் திறன் மற்றும் சொத்துப் பெறுமதி அடிப்படையில் செலான் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .