2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

BMICH ஊழியர்களுக்கு விருதுகள்

Gavitha   / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முறையான அங்கிகாரத் திட்டம் ஊடாக ஊழியர்களை அடையாளப்படுத்தி வெகுமதியளிக்கும் செயற்பாடானது அவர்களின் உற்பத்தித்திறனை மேலும் அதிகரிப்பதுடன், ஊழியர் ஈடுபாட்டில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நிரூபணமாகியுள்ளது.   

அதன் முக்கியத்துவத்தை நன்குணர்ந்த BMICH, 2016 ஜுன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஊழியர் அங்கிகாரத் திட்டத்தின் மூலமாக சிறந்த மேற்பார்வையாளர் மற்றும் காலாண்டின் சிறந்த ஊழியர் போன்ற விருதுகள் வழங்கி வருகிறது.   

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உதவி பராமரிப்பு மேற்பார்வையாளருமான .கே.எம்.எஸ்.கரஸ்னகொடவுக்கு சிறந்த மேற்பார்வையாளருக்கான விருது வழங்கபபட்டமது.மேலும்  பூந்தோட்ட உதவிகளை வழங்கும் எஸ்.டி.டி.பி.விக்ரமரத்னவுக்கு சிறந்த ஊழியருக்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.   

தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை தாண்டி அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் பணியாற்றி, பணிப் பொறுப்புணர்வுகளை நோக்கி நேர்மறையான அணுகுமுறையை வெளிப்படுத்தி முன்மாதிரியாக செயற்பட்ட ஊழியர்களைக் கௌரவித்ததையிட்டு BMICH பெருமையடைநதுள்ளதாக தெரிவித்தார்.   
QC1000 மொத்த தர முகாமைத்துவ மாதிரி காட்சிப்படுத்தல் மற்றும் QC100 Seven தரகோட்பாடுகளின் ஆதரவுடன் மிகச்சிறந்த தர கலாசாரத்தை BMICH மற்றும் அதன் ஊழியர்கள் பின்பற்றி வருகின்றனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X