Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி கையடக்க தொலைபேசி வழங்குநரான மைக்குரோமெக்ஸ் இன்ஃபொமெடிக்ஸ் நிறுவனம் ஆச்சரிமூட்டக்கூடிய ஐந்து புதிய BOLT தெரிவுகளின் அறிமுகத்தோடு அன்ட்ரொயிட் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை மேம்படுத்திக் கொண்டுள்ளது.
Q335, Q324, S300, D303 மற்றும் D200 போன்ற புதிய BOLT தெரிவுகள் உள்நாட்டவருக்கு நுழைவு மட்ட அன்ட்ரொயிட் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளின் புதுமையான தெரிவினை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
'உள்நாட்டில் வேகமாக நகரும் வாடிக்கையாளர்களின் போக்குகளையும், மைக்குரோமெக்ஸ் கையடக்க தொலைபேசிகள் அதன் சகாயமான விலை, உயர் தரம் மற்றும் விற்பனை சேவைக்கு பின்னரான நம்பகத்தன்மை போன்றவற்றின் காரணமாக மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளதை நாம் நன்குணர்ந்துள்ளோம்' என மைக்குரோமெக்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக தலைவர் அமித் மதுர் தெரிவித்தார்.
4.5 அங்குல தொடுதிரை, 512MB RAM உடன் 1.2GHz quad-core processor மூலம் வலுவூட்டப்பட்டுள்ள அன்ட்ரொயிட் தொழில்நுட்பத்தில் BOLT Q355 இயங்குகிறது.
5MP பின்புற கமரா மற்றும் 2MP முன்புற கமராவினையும், 32GB வரை விரிவாக்கம் செய்து கொள்ளக்கூடிய மெமரியை கொண்டுள்ள இந்த தெரிவானது ரூ.9,990 இற்கு விற்பனை செய்யப்படுகிறது.
4அங்குல திரை, 512MB RAM உடன் 1.2GHz quad-core processor இனால் இயக்கப்பட்டு வரும் மற்றுமொரு நுழைவு மட்ட அன்ட்ரொயிட் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியாக BOLT Q324 திகழ்கிறது. BOLT Q324 இல் 32GB வரை விரிவாக்கம் செய்து கொள்ள 4GB onboard மெமரி, டிஜிடல் முன்புற கமெரா மற்றும் 2MP பின்பக்க கமெரா போன்ற அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. இதன் விலை ரூ.8,490 ஆகும்.
1.3GHz dual core processor மற்றும் 4 அங்குல திரை ஆகிய அம்சங்களை கொண்ட BOLT D303 ஸ்மார்ட்ஃபோன் அன்ட்ரொயிட் KitKat தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
இந்த கைபேசியில் 3.2MP பின்புற கமரா மற்றும் முன்புற கமரா மற்றும் 32GB வரை விஸ்தரித்துக் கொள்ளக்கூடிய மெமரி போன்றன காணப்படுகின்றன. இந்த நுழைவு மட்ட ஸ்மார்ட்ஃபோனின் விலை ரூ.7,490 ஆகும்.
மைக்குரோமெக்ஸ் BOLT S300 தெரிவானது இரட்டை சிம் ஆதரவுடன் 1GHz processor, 512 MB RAM போன்றவற்றுடன் கிடைக்கின்றன. 4 அங்குல WVGA திரை கொண்ட இந்த BOLT S300 ஆனது அன்ட்ரொயிட் KitKat தொழில்நுட்பத்தில் இயங்குவதுடன், 1200 mAh பற்றரி, இரட்டை கமராக்கள் மற்றும் 32GB வரை விஸ்தரிக்கக்கூடிய மெமரி போன்றவற்றினால் வலுவூட்டப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.6,990 ஆகும்.
D200 BOLT தெரிவில் 1.3GHz processor, 2G இரட்டை சிம், 3.5 அங்குல திரை மற்றும் இரட்டை கமராக்கள் போன்ற அம்சங்கள் காணப்படுவதுடன், அன்ட்ரொயிட் KitKat தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இந்த தெரிவின் விலை ரூ. 5,990 ஆகும்.
மெட்ரோபொலிடன் நிறுவனத்தின் பணிப்பாளர் சன்ஜீவ் ஆரியரட்னம் கருத்து தெரிவிக்கையில், 'கடந்த ஒருசில ஆண்டுகளில் மைக்குரோமெக்ஸ் ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மிகக்குறைந்த விலைகளில் மைக்ரோமெக்ஸ் மூலம் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டு வழங்குவதில் எம்மை அர்ப்பணித்துள்ளோம்' என்றார்.
'மைக்குரோமெக்ஸ் உலகளாவிய தொகுப்பிலிருந்து விதிவிலக்கான ஸ்மார்ட்ஃபோன்களை உருவாக்குவது தொடர்பில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதுடன், இலங்கையில் அதற்கான சாத்தியங்கள் உள்ளதென நாம் உறுதியாக நம்புவதுடன், ஸ்மார்ட்ஃபோன் தலைமுறையினரின் தேவைகளை நிறைவேற்றுவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்' என மைக்குரோமெக்ஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகப் பிரிவு பொது முகாமையாளர் சவியோ மென்டொன்ஸா தெரிவித்தார்.
அனைத்து மைக்குரோமெக்ஸ் கையடக்க தொலைபேசிகளும் அதன் ஏக விநியோகஸ்தரான மெட்ரொபொலிடன் டெலிகொம் சேவைகள் ஊடாக கிடைக்கின்றன. மேலதிக தகவல்களை மெட்ரொபொலிடன் M-Centers அல்லது நாடுமுழுவதும் உள்ள ஏதேனும் மைக்குரோமெக்ஸ் காட்சியறைகள் அல்லது http://www.micromaxinfo.com/sl/ ஊடாக அல்லது ஏதேனும் எமது காட்சியறைகளுக்கு விஜயம் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago