2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

CGS உடன் A&E கைகோர்ப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தையல் நூல் உற்பத்தியாளராக திகழும் A&E, தனது உற்பத்திச் செயற்பாடுகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக, CGS உடன் தொழில்நுட்ப பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளது. வியாபார அப்ளிகேஷன்கள், வர்த்தக பயிலல்கள் மற்றும் வெளிக்களத் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக CGS திகழ்கிறது. தனது உற்பத்தி செயற்பாடுகளினுள் ஊழியர் ஊக்குவிப்பு, தரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. சர்வதேச ரீதியில் காணப்படும் ஆடை உற்பத்தியாளர்கள் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு A&E தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்நிலையில் CGS உடன் இணைந்து, இந்தச் சவால்களுக்குத் தீர்வுகளை நாடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளமை விசேட அம்சமாகும்.  

இந்த மாதத்தின் முற்பகுதியில் இந்த ஒன்றிணைவு பற்றிய அறிவித்தல் வழங்கப்பட்டிருந்ததுடன், இதற்காக, கொழும்பில் விசேட வலையமைப்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், துறையின் முன்னோடிகளான CGS இன் வியாபார அப்ளிகேஷன்கள்,  தொழில்நுட்ப வெளிக்கள பிரிவுகளின் தலைவர் போல் மகெல், A&E இன் பிரதம நிறைவேற்று அதிகாரி லெஸ் மில்லர் மற்றும் A&E லங்காவின் பங்காளர்களும் பங்கேற்றிருந்தனர். 

தையல்துறையில் ஈடுபட்டுள்ள பெருமளவான உற்பத்தியாளர்கள் இன்றைய காலகட்டத்தில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவது குறித்தும், சிக்கனத்தை பேணுவது பற்றியும் கவனம் செலுத்துகின்றனர். காலம் மற்றும் உற்பத்திச்செலவு ஆகியவற்றை குறைத்துக் கொள்வதுடன், தரத்தை உயர்த்திக்கொள்வது மற்றும் பணியிலுள்ள செயன்முறை மட்டங்களை குறைத்துக்கொள்வது பற்றியும் கவனம் செலுத்துகின்றனர். CGS’s BlueCherry® Shop Floor Control இனால் சக்தி வாய்ந்த சாதனங்கள் வழங்கப்பட்டு சேகரிப்பு மற்றும் உற்பத்தி அறிக்கையிடல் தொடர்பில் தன்னியக்கமான செயற்பாடுகள் தூண்டப்படுவதுடன், தொழிற்சாலையின் வினைத்திறன் உயர்த்தப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .