Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் லீசிங் அன்ட் பினான்ஸ் பீ.எல்.சி (CLC) நிறுவனத்தின் இஸ்லாமிய வணிகப் பிரிவான CLC- இஸ்லாமிக் ஃபினான்ஸ்,‘Hand Book in Islamic Finance’ எனும் இஸ்லாமிய நிதி தொடர்பான கோட்பாடுகள் மற்றும் அவற்றின் நடைமுறை பிரயோகங்கள் தொடர்பான முழுமையானதொரு வழிகாட்டிக் கையேட்டை சமீபத்தில் வெளியிட்டது.
இக்கையேடு, வருடங்களுக்கு முன்னர் தூதுவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலப்பகுதியில் காணப்பட்ட இஸ்லாமிய நிதி முறைமை தொடர்பான கோட்பாட்டு விடயங்களை வழமையான நிதி முறைமையுடன் இணைந்த வகையிலானதொரு நுண்ணறிவை வாசிப்பவருக்கு வழங்கும். மேலும் இது, இஜாராஹ் (குத்தகை), முராபஹா (கிரயம் + விற்பனை மட்டம்), டிமினிஷிங் முஷாரகா (பங்குடைமை நிதி), வகாலா (முகவராண்மை), முஸவ்வமாஹ் (விற்பனை) மற்றும் முதாரபாஹ் (இலாபப் பங்கீட்டு முதலீடு) போன்றவற்றை உள்ளடக்கிய இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் பேணப்படும் தயாரிப்புக்கள் தொடர்பாக மேலும் விவரிக்கின்றது.
இஸ்லாமிய வணிகப்பிரிவு, இஸ்லாமிய நிதி தொடர்பான விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்துவதற்கான அதன் சமூகக் கூட்டுப் பொறுப்புடைமையின் பாகமொன்றாக “வாடிக்கையாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின்” ஊடாக இந்நூலை வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் மற்றும் நவம்பர் காலப்பகுதியில், இஸ்லாமிய நிதிப் பிரிவானது, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, கண்டி, கம்பளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தளை, கிண்ணியா, மூதூர், கேகாலை, புத்தளம் நீர்கொழும்பு போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் தெரிவுசெய்யப்பட்ட நகரங்களில் நடாத்தியது. இந்நிகழ்ச்சிகள் இஸ்லாமிய நிதிப்பிரிவிலுள்ள, ஷரீஆ ஆலோசகர் அஷ்-ஷேஹ் ஸைத் நூராமித் அவர்களால் நடாத்தப்பட்டன.
இஸ்லாமிய வணிகப் பிரிவானது, வாடிக்கையாளர்களுக்கு இக்கோட்பாட்ைட விளக்கப்படுத்துவதற்கும் மற்றும் அவர்கள் தமது வணிக செயற்பாடுகளை வட்டி சாராத கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுத்திக் கையாள்வதற்கான அறிைவ பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இந்நூலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்நூலானது, இஸ்லாமிய நிதி மீதான நடைமுறைப் பிரயோகம் மற்றும் வெவ்வேறுபட்ட வாடிக்கையாளர்களின் பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிறுவனங்கள் எவ்வாறு வெவ்வேறு தயாரிப்புக்கள் மூலமாக நிதிக் கோட்பாடுகளை வழங்குகின்றன என்பது தொடர்பாக இஸ்லாமிய நிதி அமைப்புக்களில் வாடிக்கையாளர்களினால் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் தொடர்பாகவும் இந்நூல் கலந்துரையாடுகின்றது.
38 minute ago
23 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
23 Jul 2025