2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

Canon G தொடரிலான அச்சு இயந்திரங்கள் அறிமுகம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

Canon இன் தொடர்ச்சியான மை விநியோக முறைமையைக் கொண்ட அச்சு இயந்திரங்களை (CISS Printers) பெருமையுடன் இலங்கைச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தG தொடரிலான அச்சியந்திரங்கள் மூன்று புதிய மாதிரிகளை உள்ளடக்கியுள்ளன. தனிச் செயற்பாட்டைக் கொண்ட G1000, பல்தொழில்பாட்டைக் கொண்ட G2000, மற்றும் கம்பித்தொடர்பற்ற 1 G3000 ஆகியவையே அந்த மாதிரிகளாகும். மிகக் குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையான பிரதிகளை அச்சிட்டுக் கொள்ள பயன்படுத்துனர்களுக்கு இது வசதியளிக்கின்ற அதேநேரத்தில், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் மிகவுயர்ந்த அச்சிடல் தராதரத்துடன் கிடைக்கப் பெறுவதையும் உறுதிப்படுத்துகின்றன.

'அதிக எண்ணிக்கையிலான அச்சுப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்ட புதுமையானதும் புத்தாக்கமானதுமான மூன்று அச்சியந்திரங்களும் - மிகச் சிக்கனமானக் கட்டணத்திலும் ஈடிணையற்ற வேகத்திலும் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களைத் தரமாகவும் அதிகளவிலும் அச்சிட்டுப் பெறும் தேவையைக் கொண்டிருக்கும் அலுவலகங்களுக்கு மிகவும் பொருத்தமானவையாகும்.

இந்தத் தொழில்நுட்பத்தை இலங்கையின் பாவனையாளர்களுக்கு வழங்குவதையிட்டும் அதேபோன்று அவர்களது அச்சிடல் செலவைக் குறைப்பதற்கு உதவுவதையிட்டும் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்' என்று இந் நிகழ்வுக்காக கொழும்புக்கு வந்திருந்த திரு. டூ குக் யங் (பணிப்பாளர் - 9Canon Singapore Pvt Ltd)  தெரிவித்தார்.

இந்த மூன்று அச்சு இயந்திரங்களும் பெரிய மை போத்தல்களுடன் சந்தைக்கு அறிமுகமாகி இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி அதிகளவான பக்கங்களை அச்சிட்டுப் பெற்றுக்கொள்ள முடியும். இது அதிக அச்சிடல் தேவைகளுடைய வீடுகளிலான மற்றும் அலுவலகத்திலான பாவனையாளர்களை திருப்திப்படுத்துகின்றது. இதன்மூலம் அடிக்கடி மை பெட்டகங்களை (ink cartridge)  பதிலீடு செய்கின்ற சிரமம் எதுவும் இல்லாமல், 6000 பக்க கறுப்பு-வெள்ளை ஆவணப் பிரதிகளையும் 7000 பக்க வர்ண ஆவணப் பிரதிகளையும் அச்சிட முடியும்.

'பணிபுரியும் மேசையின் பெறுமதியான இடப்பரப்பை அதிகளவில் பிடிக்காத விதத்தில், நவீன முறையில் இந்த அச்சியந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மை கசிதல் என்பது மிகவும் பொதுவான ஒரு பிரச்சினை என்பது எமக்கு தெரியும்.  Canon தயாரிப்பான இப்புதிய மூன்று அச்சு இயந்திரங்களுக்கும் உரிய, பயன்படுத்தப்படாத மை ஆனது கீழ்ப்புற திருகு மூடிகளுடனான ஒரு போத்தலுடன் வரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே இதன்மூலம் கசிவு தடுக்கப்படுகின்றது' என்று மெட்ரோபொலிட்டன் கம்பியூட்டர்ஸ் (பிரைவட்) லிமிட்டட் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் சமிந்த ராஜபக்ஷ கூறினார். அவர் மேலும் கூறுகையில், 'உள்ளேயிருக்கும் பகுதிகள் வெளிப்படையாக தெரியும் விதத்திலான மை கொள்கலன்கள் இந்த அச்சியந்திரங்களின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, இவற்றை எப்போது மீள்நிரப்ப வேண்டும் என்பதைப் பாவனையாளர்கள் மிக இலகுவாக கண்டறிந்துக் கொள்ள முடியும்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X