Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
Prime Group, தனது Clover by Prime Signature Villas திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வை அண்மையில் கொண்டாடியிருந்தது. தனது ஒவ்வொரு நிர்மாணத்திட்டங்களிலும், தரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை விவரங்களில் நுணுக்கமாக கவனம் செலுத்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் அளித்தல் எனும் கோட்பாடுகளைப் பேணும் Prime Group இன் அர்ப்பணிப்பை மேலும் வெளிப்படுத்துவதாக இந்தத் திட்டத்தின் பூர்த்தி அமைந்துள்ளது.
Clover இல் 54 சொகுசு விலாக்கள் அமைந்திருப்பதுடன், அவை 16 பிரத்தியேகமான வடிவமைப்புகளில் காணப்படுகின்றன. தலவத்துகொட பகுதியில் அமைதியான 4.5-ஏக்கர் காணியில் இந்தத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
Prime Group'இன் இணை-தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “Prime Group’இன் 28ஆவது விலா பூர்த்தியை நாம் இன்று கொண்டாடுகிறோம். 28ஆவது விலா சமூகத்தாருக்கும் மற்றும் இதுவரையில் குழுமத்தினால் 39 தொடர்மனைத் தொகுதிகளும் நிர்மாணிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதனூடாக, வாழ்வுக்கு வளமூட்டும் இல்லங்களை விநியோகிப்பதில் எமது அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. Clover இல் காணப்படும் ஒவ்வொரு அம்சமும், அலங்காரம், சௌகரியம் மற்றும் சமூகம் ஆகியவற்றில் Prime’இன் அதீத ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. மேலும், தற்போது 3,000 க்கும் அதிகமான அலகுகள் நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதாரத்துக்கு Prime Group பெருமளவு பங்களிப்பு வழங்கப்பட்ட வண்ணமுள்ளது. அவற்றினூடாக, ஆயிரக் கணக்கான தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வரி வருமானமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. Prime இல், வாழ்க்கை முறைகளை வடிவமைத்து, ரியல் எஸ்டேட் தொழிற்துறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். இந்த மைல்கல் பூர்த்தியானது, Clover குடும்பத்தாருக்கு மகிழ்ச்சிகரமான தருணங்களின் ஆரம்பமாக அமைந்திருப்பதுடன், இலங்கையின் ரியல் எஸ்டேட் தொழிற்துறையை மாற்றியமைப்பதில் நாம் தொடர்ச்சியாக காண்பிக்கும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.”
Prime Group இன் நீண்ட நாள் வாடிக்கையாளர்களில் ஒருவரான ரெக்ஸ் குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “எனக்கும், Clover Villas இன் உரிமையாளர்களாக திகழும் அனைவருக்கும் இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாகும். நான் Prime இன் நீண்ட கால வாடிக்கையாளராக திகழ்வதுடன், இது எனது மூன்றாவது முதலீடாகும். Prime Group இன் வலிமையான செயற்பாட்டை நான் பாராட்டுகிறேன். அவர்களின் வாடிக்கையாளர் சேவை மற்றும் பணிகளில் ஈடுபட்ட அணியினர் சிறப்பாக செயலாற்றியிருந்தனர். நான் நிர்மாணப் பணிகளின் போது சில தடவைகள் விஜயம் செய்திருந்தேன். பெரும்பாலும் முன்னறிவித்தல்கள் எதுவுமின்றி வந்திருந்தேன். எவ்வாறாயினும், அனைவரும் ஆதரவாக இருந்தனர். மேலதிகாரியுடன் என்னால் கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடிந்திருந்தது. அவரும், அவரின் அணியினரும் சுமூகமாக பதிலளித்திருந்தனர். Prime இல் நான் அவதானித்த பிரத்தியேகத் தன்மையாக இது அமைந்திருந்ததுடன், நட்பான சூழல் உருவாக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களின் மீது அக்கறையுடன் செயலாற்றும் தவிசாளர் மற்றும் இணை-தலைமை அதிகாரிக்கு நான் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். Prime இல் முதலீடு செய்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்.” என்றார்.
இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் Prime Group இன் தலைமைத்துவத்தை நோக்கிய பயணத்துக்கு இது போன்ற திட்டங்கள் மேலும் வலுவூட்டுகின்றன. உறுதியான அடித்தளம் மற்றும் பரந்த பிரிவுகளுடன் சந்தையின் முன்னோடி எனும் நிறுவனத்தின் கீர்த்திநாமத்தை மேலும் உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.
7 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
18 Oct 2025