Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 12 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்று பரவ ஆரம்பித்ததன் காரணமாக சர்வதேச பொருளாதாரங்கள் வீழ்ச்சியைக் கண்டு வருகின்ற நிலையில், இலங்கை தனது பிரஜைகளின் நல்வாழ்வை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அயராது உழைத்து வருகிறது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையுடன் கலந்தாலோசித்து இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள மற்றொரு முன்னெச்சரிக்கை ஏற்பாடாக, உலகளாவில் பரவி வருகின்ற இந்த தொற்றுநோயின் பாதகமான விளைவுகளை சமாளிக்க நாட்டிற்கு உதவுவதற்காக 2020 ஏப்ரலில் விசேட வைப்புக் கணக்கை அறிமுகப்படுத்துகிறது.
விசேட வைப்புக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கான தகைமை 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது, அதாவது 'நிதியங்கள், வர்த்தக ஸ்தாபனங்கள், சங்கம் அல்லது ஏனைய நலன்விரும்பிகள் அடங்கலாக இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வசிக்கும் எந்தவொரு இலங்கைப் பிரஜையோ, இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ளவர்களோ அல்லது பிற நாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரோ, குறிப்பிட்ட எந்தவொரு வெளிநாட்டு நாணயத்திலும் அல்லது இலங்கை ரூபாயிலும் கால வைப்பு வடிவில் 'விசேட வைப்புக் கணக்கு' என்ற தலைப்பில் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட முகவருடன் ஒரு கணக்கைத் திறந்து பேணுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஒழுங்குமுறையின் திகதியிலிருந்து ஆறு மாத காலப்பகுதிக்கு கணக்கு வைத்திருப்பவரின் பேரில் வங்கி முறை மூலம் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் இந்த விசேட கணக்கில் வைப்புச் செய்யப்பட முடியும்.'
இலங்கை ரூபா, அமெரிக்க டொலர், யூரோ, ஸ்ரேலிங் பவுண்ஸ், அவுஸ்திரேலிய டொலர், ஜப்பான் யென், சிங்கப்பூர் டொலர், கனேடிய டொலர் மற்றும் சுவிஸ் ஃபிராங் ஆகிய நாணயங்களில் விசேட வைப்பு கணக்குகளை ஆரம்பிப்பதற்கு DFCC வங்கி அனுமதிக்கின்றது. அதே வேளையில், இந்த நிலையான வைப்புக் கணக்கின் பிற அம்சங்களில் குறைந்தபட்ச வைப்புத்தொகைக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பு இன்மை, வைப்பின் குறைந்தபட்சம் ஆறு காலம் மாதங்கள், மற்றும் முதிர்ச்சியடைந்த பின்னர் இலங்கைக்கு வெளியே எவ்விதமான சிக்கல்களுமின்றி மாற்றி நிதியை திருப்பி அனுப்பும் வசதி ஆகியன அடங்கியுள்ளன. சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறைகள் அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து (ஏப்ரல் 08, 2020) ஆறு மாத காலப்பகுதியில், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களால், வெளிநாட்டிலிருந்து வங்கி முறைமையினூடாக அனுப்பி வைக்கப்படும் வெளிநாட்டு நாணயம் அல்லது இலங்கை ரூபாயில் ஒரு கூட்டுக் கணக்காக விசேட வைப்புக் கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும்.
முதிர்ச்சியில் செலுத்தப்படும் அதிக வட்டியுடன் 6 மாத கால வைப்புக் கணக்குகளுக்கான சாதாரண வட்டி வீதத்தை விட ஆண்டுக்கு 1 சதவீத புள்ளி அதிகமாகவும், 12 மாத வைப்புகளுக்கான சாதாரண வட்டி வீதத்தை விட ஆண்டுக்கு 2 சதவீத புள்ளி அதிகமாகவும் வழங்கப்படுவதும் அடங்கும்.
இந்த கடினமான காலகட்டத்தில், அனைத்து பிரஜைகளும் இந்த வாய்ப்பை இலங்கை மீதான நல்லெண்ணத்தின் சமிக்ஞையாகப் பயன்படுத்துவதன் மூலமும், நமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதன் மூலமும் வங்கி முறையை ஆதரிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும் தகவல் விபரங்களுக்கு, www.dfcc.lk ஐப் பார்வையிடவும் அல்லது 011-2350000 ஐ அழைக்கவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago