2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

DHL APIC புத்தாக்க நிலையம்

Gavitha   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரக்கியல் உலகின் தொலைநோக்கு பார்வையை வழங்கும் வகையிலும், விநியோக வலையமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய புத்தாக்கத் தீர்வுகளை விருத்தி செய்யும் வகையிலும் அண்மையில் சிங்கப்பூர் நகரில் அதன் ஆசிய பசுபிக் புத்தாக்க நிலையத்தை (APIC) DHL அங்குரார்ப்பணம் செய்திருந்தது. பல மில்லியன் பெறுமதியான இந்த நிலையம்,  ஜேர்மனிக்கு வெளியே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் DHL இன் முதலாவது புத்தாக்க நிலையமாக உள்ளதுடன், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் புத்தமைவான சரக்கியல் சேவைகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதலாவது நிலையமாகவும் திகழ்கிறது. 160 மில்லியன் அமெரிக்க டொலர் (€104-மில்லியன்) பெறுமதியான DHL விநியோக சங்கிலி மேம்படுத்தப்பட்ட பிராந்திய நிலையத்தின் கட்டட வளாகம், சிங்கப்பூரில் உள்ள டெம்பைன்ஸ் லொகிஸ் பூங்காவில் அமைந்துள்ளது.

DHL நிறுவனத்தின் பிரதம வர்த்தக அதிகாரியான பில் மெஹல் கருத்து தெரிவிக்கையில், 'எமது வளர்ந்துவரும் சந்தைகள் மூலமாக 2020ஆம் ஆண்டளவில் DHL இன் உலகளாவிய வருவாயில் 30% இனை ஈட்டிக்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ளோம். புதிய தொழில்நுட்பங்கள், செயல்முறைகள் மற்றும் உற்பத்திகள் ஊடாக எமது சேவைகளைச் சந்தைகளுக்கேற்ப வேறுபடுத்தி எமது நிலையான துறைசார் தலைமைத்துவத் தேவைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறோம். ஜேர்மனியிலுள்ள எமது முதலாவது நிலையத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புத்துருவாக்கத்தில் எமது தலைமைத்துவத்தை பேணும் வகையில் சிங்கப்பூர் APIC இன் அங்குரார்ப்பணம் அமைந்துள்ளது' என்றார்.

APIC ஆனது பிராந்தியத்தில் சரக்கியல் செயற்பாடுகளை மாற்றியமைக்கக்கூடிய எதிர்கால தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துகிறது. இதில் கிடங்கின் சட்டமன்ற தொடர்கள் மற்றும் உற்பத்தி தெரிவுக்கான 'Smart Glasses', அவசரமாக மருந்துப் பொருட்களை விநியோகிப்பதற்கான ஆளில்லா விமானங்கள், வாகனங்களின் பெறுமதியை 30% ஆல் மேம்படுத்திக் கொள்வதற்கான 'இயந்திரத்திலிருந்து இயந்திரம்' இனை பயன்படுத்தும் கேள்வி வாகனங்களின் பராமரிப்பு, விரைவான மற்றும் செயற்றிறன் மிக்க போக்குவரத்துக்கு ஓட்டுநரில்லா சிறுஊர்தி போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X