Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஏப்ரல் 25 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
Diesel & Motor Engineering PLC (DIMO) நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் இடத்துக்கு சென்று சேவையை வழங்கும் சௌகரியத்தை அளிக்கும் வகையில், மற்றுமொரு முன்னெடுப்பை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வீதியோர உதவு சேவையை நாடுகின்ற பொதுமக்களுக்கு உகந்த ஒரு தீர்வை “ DIMO Tyre & Battery Mobile Service” வழங்குகின்றது. இந்த சௌகரியமான சேவைகளை வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் பெற்றுக்கொள்ள முடியும்.
வீதியோர உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக அனைத்து உபகரண வசதிகளையும் கொண்ட பிக்அப் வாகனம் மற்றும் தொழில்நுட்பவியலாளரான சாரதியும் எப்போதும் தயாராக உள்ளனர். DIMO Tyre & Battery Mobile service மூலமாகக் கிடைக்கப்பெறுகின்ற சேவைகள் வருமாறு பற்றரியை இயக்கச் செய்தல் (jump start), பற்றரி சோதனை, டயரிலுள்ள காற்று அளவு வீக்கம், டயரில் காற்றுப்போகும் வேளையில், மாற்று சக்கரத்தைப் பொருத்தல், கார் பற்றரிகளின் விற்பனை மற்றும் டயரில் காற்றுப் போகும் போது திருத்த வேலைகள். வாடிக்கையாளர்கள் 24 மணி நேர பிரத்தியேக வாடிக்கையாளர் சேவை இலக்கத்தின் மூலமாக, DIMO Tyre & Battery, Mobile Service மையத்தைத் தொடர்புகொண்டு, மேற்குறிப்பிட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
DIMO Tyre & Battery Mobile Service மையத்தின் திறப்பு விழா நிகழ்வு அண்மையில், DIMO 800-Mecedes Benz மையத்தில் இடம்பெற்றது. ரஞ்சித் பண்டிதகே (பணிப்பாளர் சபைத் தலைவர் - DIMO), கஹநாத் பண்டிதகே (பிரதம நிறைவேற்று அதிகாரி - DIMO), கலாநிதி ஏ எம். ஜமீல் (அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவர்), சண்ண வீரவர்த்தன (பணிப்பாளர் - DIMO) மற்றும் ரொஷான் சேரசிங்க (பொது முகாமையாளர் - DIMO Tyre பிரிவு) ஆகியோர் கலந்துகொண்டனர்.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago