2025 ஜூலை 24, வியாழக்கிழமை

DIMO மற்றும் டாடா நிறுவனங்களுடன் கைகோர்க்கும் LIOC

Editorial   / 2017 நவம்பர் 23 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா ஐ.ஓ.சி. (LIOC), Diesel & Motor Engineering PLC மற்றும் டாடா மோட்டர்ஸ் லிமிட்டட் இந்தியா ஆகிய மூன்று நிறுவனங்களும், டாடா மோட்டர்ஸ் அசல் இயந்திர எண்ணெயை அறிமுகம் செய்துள்ளன. உயர்தரமான அடிப்படை எண்ணெய்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்க்கைகளை கொண்டு டாடா வாகனங்களுக்காக கலவை செய்யப்பட்ட, உயர் செலாற்றலுடைய புதிய தலைமுறை (ஏனைய பண்பியல்புகளுக்கு புறம்பாக CI4 Plus & 15w40) எண்ணெயாக இந்த எண்ணெய் காணப்படுகின்றது. அத்துடன் இவ்வகை எண்ணெய் இந்நிறுவனங்களின் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் போட்டிகரமான விலையின் அடிப்படையில் கிடைப்பதாகவும் இருக்கும். இது ஒரு அசல் இயந்திர எண்ணெயாக காணப்படுவதுடன், ஐ.ஓ.சி. தொழில்நுட்பத்தின் துணையுடன் டாடா டீசல் என்ஜின்களுக்காக வடிவமைக்கப்பட்டதாக திகழ்கின்ற அதேநேரத்தில், DIMO நிறுவனத்தின் நம்பிக்கை மற்றும் பரிந்துரையின் பக்கபலத்தையும் கொண்டுள்ளது. இதனை பயன்படுத்துவோருக்கு இந்த எண்ணெய் அதிகரித்த அளவிலான மைல்களுக்கு பயணிக்கும் ஆற்றல், என்ஜினின் நீண்ட ஆயுள், நீளமான எண்ணெய் மாற்றும் காலஇடைவெளி, என்ஜினில் தீப்பொறி ஏற்படும் நேரத்தில் கழிவு வெளியேற்றத்தை கணிசமானளவு குறைத்தல், மிகவும் வினைத்திறனான cam/tappet செயற்பாடு மற்றும் valve train wear பாதுகாப்புடன் கூடிய எண்ணெய் குறைவடைவதை கட்டுப்படுத்தும் மேம்பட்ட ஆற்றல் மற்றும் மிகச் சிறந்த புகைவெளியேற்ற கட்டுப்பாடு போன்ற பல அனுகூலங்களை வழங்குகின்றது. இதில் உள்ளடங்கியுள்ள மேம்பட்ட குளிர் காலநிலைக்கான உள்ளடக்கங்களின் காரணமாக, அனைத்து காலநிலையிலும் மிகச் சிறந்த செயலாற்றலை இது வழங்குகின்றது.  

இப்புதிய டாடா மோட்டர்ஸ் அசல் எண்ணெய் வகைகள் DIMO நிறுவனத்தின் நாடளாவிய சேவை வலையமைப்பின் ஊடாக கிடைக்கக் கூடியதாகவுள்ளன. அதாவது, டாடா வேலைத்தளங்கள், சேவை விற்பனையாளர் வலைப்பின்னல், டாடா உதிரிப்பாக கரும பீடங்கள் மற்றும் டாடா உதிரிப்பாக விற்பனையாளர் வலைப்பின்னலூடாக இதனைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சேவை நிலையங்கள், இயந்திர எண்ணெய் விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை சேவை நிலையங்கள் என 1,500 இற்கும் மேற்பட்ட இடங்களிலும் இதனை கொள்வனவு செய்ய முடியும்.  

நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை கொண்ட DIMO, டாடா மோட்டர்ஸ் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. கடந்த தசாப்தங்களில் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், புதிதாக அறிமுகமாகும் டாடா மோட்டர்ஸ் அசல் எண்ணெய் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு நீடித்த பாவனையும் செயற்றிறனான பெறுபேறுகளும் கிடைப்பதற்கு உத்தரவாதமளிக்கின்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .