2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ESOFT மெட்ரோ கம்பஸ் பட்டமளிப்பு வைபவம் 2021 சிறப்பாக முன்னெடுப்பு

S.Sekar   / 2021 டிசெம்பர் 06 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ESOFT மெட்ரோ கம்பஸின் வருடாந்த பட்டமளிப்பு வைபவம், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) அண்மையில் இடம்பெற்றது. இந்த ஆண்டின் பட்டமளிப்பு வைபவத்தில் மொத்தமாக 1800 மாணவர்கள் தமது பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

வெற்றிகரமாக தமது கல்வி நடவடிக்கைகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு Pearson BTEC உயர் தேசிய டிப்ளோமாக்கள், Pearson Level 7 தகைமைகள், லண்டன் மெட்ரொபொலிடன் பல்கலைக்கழக (பிரித்தானியா) பட்டங்கள் மற்றும் MBA கள், கிங்ஸ்டன் பல்கலைக்கழக (UK) பட்டங்கள் மற்றும் MScகள் போன்றன வழங்கப்பட்டிருந்தன.

இரண்டு நாட்களில் 9 அமர்வுகளாக இந்த வைபவம் இடம்பெற்றதுடன், சகல சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி இடம்பெற்றது. பட்டமளிப்புக்கு மேலதிகமாக, ஒவ்வொரு பிரிவிலும் உயர்ந்த பெறுபேறுகளைப் பதிவு செய்தவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் விசேட விருதுகள் போன்றனவும் வழங்கப்பட்டிருந்தன.

நிகழ்வின் பிரதான உரைகளை கல்விமான்கள் மற்றும் தொழிற்துறையின் முன்னோடிகளான LOLC ஃபினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி கொனார்ட் டயஸ், Axiata Digital Labs இன் பிரதம நிறைவேற்று அதிகாரி துஷேர கவ்தவத்த, ESOFT குழுமத்தின் தவிசாளரும் முகாமைத்துவ பணிப்பாளருமான கலாநிதி. தயான் ராஜபக்ச, இலங்கை கட்டளைகள் சபையின் தவிசாளர் கலாநிதி. சம்பத் வஹால, Moore Stephens Consulting பிரைவட் லிமிடெட் மற்றும் Moore Stephens Aiyar இன் முகாமைத்துவ பணிப்பாளரும், இணைப் பங்காளருமான திஷான் சுபசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் PhD கற்கையின் ஒழுங்கிணைப்பாளருமான பேராசிரியர். ஏ.ஏ.சி. அபேசிங்க - M.Phil. ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

பல்கலைக்கழக பங்காளர்களின் வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் மெய்நிகர் முறையில் இணைந்து கொண்டு, பட்டதாரிகளுக்கு வீடியோ வாயிலாக தமது வாழ்த்துகளையும், உரைகளையும் தெரிவித்தனர். இரு தினங்களிலும் Virtusa தொழில் வாய்ப்புகளை வழங்கும் அணியினர் பிரசன்னமாகியிருந்ததுடன், இளம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். புதிய பொருளாதாரத்தினால் எழுந்துள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலான பட்டதாரிகளை தயார்ப்படுத்துகின்றமை தொடர்பில் ESOFT பெருமை கொள்கின்றது.

21 வருட கால வரலாற்றை ESOFT கொண்டுள்ளதுடன், இலங்கையில் காணப்படும் மாபெரும் தனியார் உயர்கல்வி வலையமைப்பாகவும் அமைந்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் 40 க்கும் அதிகமான கிளைகளினூடாக பரந்தளவு கற்கைகளை வழங்குவதுடன், பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்தவர்களுக்கான கற்கைகள் முதல் பட்டப்பின்படிப்பு கற்கைகள் வரை வருடாந்தம் 40000 பேருக்கான கற்பித்தல்களை மேற்கொள்கின்றது.

2012 ஆம் ஆண்டில் லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ESOFT கைகோர்த்து, பொறியியல் துறையில் பட்டப்படிப்புகளை வழங்க முன்வந்திருந்ததுடன், அதற்காக கட்டுபெத்த பகுதியில் விசேடமான பொறியியல் கல்வியகத்தையும் நிறுவியிருந்தது. 2013 ஆம் ஆண்டில், லண்டன் மெட்ரொபொலிடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, கணனியியல், வியாபாரம், விருந்தோம்பல் மற்றும் பிரயாணம் மற்றும் சுற்றுலா போன்றவற்றில் பட்டப்படிப்புகளை வழங்க முன்வந்திருந்தது. கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தினூடாக தகவல் தொழில்நுட்பத்தில் பல்வேறு MSc கற்கைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிப் பிரிவுகளில் சர்வதேச Doctoral கற்கைகள் போன்றனவும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

தமது கல்விச் சிறப்பு மற்றும் வியாபார வினைத்திறன் போன்றவற்றுக்காக, Pearson (UK), BCS (UK), NBQSA, தேசிய வர்த்தக சம்மேளனம், இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் ஒன்றியம் ஆகியவற்றினூடாக பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளையும் ESOFT குழுமம் வென்றுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .