Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
Fairfirst தலைமைத்துவ நிகழ்ச்சியில், 12 வார காலத்தை முதல் தொகுதியினர் அண்மையில் பூர்த்தி செய்திருந்தனர். 2017 ஜுன் மாதம் தனது செயற்பாடுகளை 21 பேருடன் ஆரம்பித்திருந்த இந்த நிகழ்ச்சி தகைமை மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்களால் முன்னெடுக்கப்படுகிறது. கொழும்பு ஸ்கூல் ஒஃவ் மனேஜ்மன்ட் இனால் இந்தக் கற்கைகள் மேற்பார்வை செய்யப்படுவதுடன், தலைமைத்துவத்துக்கு அவசியமான வெவ்வேறு விடயங்கள் இதன்போது அறிவிக்கப்படும்.
சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வியாபார ஆளுமைகள் மற்றும் அடிப்படை பெறுமதிகள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்கும் வகையில் Fairfirst தலைமைத்துவ நிகழ்ச்சி அமைந்துள்ளது. இது தொடர்பில், மனித வளங்கள் பிரிவின் தலைமை அதிகாரி சுபானி ஏக்கநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “ஊழியர்களின் பங்களிப்புகளை Fairfirst ஐச் சேர்ந்த நாம் வரவேற்கிறோம். இந்த நிகழ்ச்சி எமது ஊழியர்களை வளமூட்டுவதாக அமைந்துள்ளதுடன், அவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.Fairfirstஇல் அறிமுகம் செய்யப்படவுள்ள பல வியப்பூட்டும் அம்சங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது” என்றார்.
Fairfirstபிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான கலாநிதி. சஞ்ஜீவ் ஜாஆ கருத்துத் தெரிவிக்கையில், “பங்குபற்றுநர்கள் பெற்றுக்கொண்ட அறிவுக்கு மேலதிகமாக, இந்த நிகழ்ச்சி உறுதியான பிணைப்பை கொண்டுள்ளது. முன்னோக்கிய பணியாற்றும் சூழலை ஏற்படுத்துவதில் Fairfirst நம்பிக்கை கொண்டுள்ளதுடன், களிப்புடன் தம்மை அபிவிருத்தி செய்வதிலும் கவனம் செலுத்த ஊக்குவிக்கிறோம். இந்தத் திறமை வாய்ந்த ஊழியர்களை ஊக்குவித்து, அவர்களை வியாபார தலைவர்களாக மாற்றுவது எமது நிறுவனத்துக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது” என்றார்.
Fairfax குழுமத்தின் தாய் நிறுவனத்தின் வழிகாட்டல்களின் பிரகாரம், புதிதான முகாமைத்துவ பாணியை ஊக்குவிப்பது Fairfirstஇன் நோக்காக அமைந்துள்ளது. தலைமைத்துவம் அதன் பிரதான பெறுமதிகளில் தங்கியுள்ளதுடன், சாதாரண உற்பத்திசார்ந்த அழைப்புக்கு அப்பால் சென்றுள்ளது.
இலங்கையில் காணப்படும் சிறந்த பொதுக்காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக Fairfirstஇன் சூரன்ஸ் திகழ்கிறது. தனிநபர்கள், வியாபாரங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு Fairfirst தனது சேவைகளை வழங்கி வருவதுடன், இதற்காக நாடளாவிய ரீதியில் பரந்தளவு ஊழியர்களையும், கிளை வலையமைப்பையும் கொண்டுள்ளது. சந்தையின் முன்னணி முகவர்களுடனும் பிணைப்பை பேணி வருகிறது. டொரான்டோவை மையமாகக் கொண்டு, சர்வதேச ரீதியில் முன்னணியில் திகழும் சொத்துக்கள் மற்றும் விபத்துக்கள் காப்புறுதி மற்றும் மீள் காப்புறுதி மற்றும் முகாமைத்துவ நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் Fairfirst குழுமத்தின் ஒரு அங்கத்துவ நிறுவனமாக Fairfirstஇன் சூரன்ஸ் திகழ்கிறது.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago