2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

GLX Digital Evolver வியாபார வளர்ச்சியில் அதிகரிப்பு பதிவு

S.Sekar   / 2021 டிசெம்பர் 10 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘GLX Digital Evolver’ நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக Good Life X (GLX) அறிவித்துள்ளது. 2021 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு 12 வாரங்களுக்கு அதிகமாக இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த பிரயாணம் மற்றும் சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்த வியாபாரங்களுக்கு டிஜிட்டல் ரீதியில் வலுவூட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான ஜேர்மனி அமைச்சின் நிதியுதவியில், இலங்கை Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) இனால் மெய்நிகர் நிகழ்வாக ஒன்லைனில் மூன்று மாத காலம் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், பத்து பங்குபற்றுநர்களையும், பத்து டிஜிட்டல் மற்றும் சுற்றுலா நிபுணர்களையும் ஈடுபடுத்தி இடம்பெற்றது. இறுதி நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக, RETRACE Hospitality இன் ஸ்தாபகர் சலன பெரேரா பங்கேற்றார். பங்குபற்றுநர்களுடன் தமது நேர்த்தியான தாக்க ஆலோசனை மற்றும் மீண்டெழும் ஹோட்டல் அபிவிருத்தி தொடர்பான தமது நிபுணத்துவ அறிவை பங்குபற்றுநர்களுடனும், பார்வையாளர்களுடனும் பகிர்ந்து கொண்டார். தொழிற்துறை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த உள்ளம்சங்களுடன், பெருவாரியான நிபுணர்கள் மற்றும் பங்குபற்றுநர்கள் பற்றிய பிரதான உள்ளம்சங்கள் மற்றும் கருத்துரைகளை இந்த நிகழ்வு கொண்டிருந்தது.

Good Life X இன் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரந்துலா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “நிலைபேறாண்மையை நோக்காகக் கொண்ட இலங்கையின் பிரயாணம் மற்றும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தமது வியாபாரங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவுவது மாத்திரமன்றி, எதிர்காலத்துக்கு வருமானமீட்டுவதற்கு உதவும் வகையிலும், டிஜிட்டல் அறிவையும், வசதிகளையும் கொண்டிருப்பதற்கு உதவும் வகையிலும் அமைந்துள்ளது. தொற்றுப் பரவலின் பின்னரான எதிர்கால பிரயாணிகள், தமது பாவனையாளர் செயற்பாடுகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வதில் அதிகளவு ஈடுபாட்டை கொண்டிருப்பார்கள்.  நாடு மீளத் திறக்கப்பட்டதும் முன்னேறிச் செல்வதற்கு, இந்தத் துறைக்கு தொழில்நுட்பம் என்பது முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் பெறுபேறு என்பது நிலைபேறான வியாபார இலக்குகள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்கள் மற்றும் சாதனங்கள், கட்டமைப்பு செம்மையாக்கம் மற்றும் நாளிகை முகாமைத்துவ தந்திரோபாயங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வியாபாரங்கள் தொடர்ந்து இயங்குவது மாத்திரமன்றி, எதிர்வரும் மாதங்கள் மற்றும் வருடங்களில் எமது தேசம் கொவிட்-19 தொற்றுப் பரவலிலிருந்து மீண்டு, அதன் காரணமாக நாம் முகங்கொடுத்துள்ள இந்த நெருக்கடியான நிலையிலிருந்து மீள்வதற்கு முடியும் என்பதையிட்டு நாம் திருப்தியடைகின்றோம்.” என்றார்.

இந்த நிகழ்ச்சியின் பயனாக, ஒன்லைன் மென்பொருள் பதிவுக் கட்டமைப்பான  TrekkSoft ஐ ஒன்றிணைக்கும் முதல் நிறுவனங்களில் ஒன்றாக Rediscover  திகழ்வதை எம்மால் அவதானிக்க முடிந்தது. மேலும், Infinity Vacations போன்ற பங்குபற்றுநர்களால் - ‘That’s a Holiday’ எனும் வர்த்தக நாமம் உருவாக்கப்பட்டிருந்தது. இதனூடாக மிலேனியல் மற்றும் Gen-Z பிரயாணிகளுக்கு சேவைகள் வழங்கப்படுவதுடன், 24/7 ஒன்லைன் பிரயாண கட்டமைப்பு சேவை நிறுவ பயன்படும். துரித மீள வர்த்தக நாம பதிவு திட்டத்தினூடாக Gileemale இனால் ஒன்லைனில் தனது பிரசன்னத்தை மேம்படுத்திக் கொள்ள முடிந்ததுடன், தற்கால பிரயாணிகளின் தேவைகளுக்கேற்ப தம்மை மாற்றியமைத்துக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது.

GLX Digital Evolver நிகழ்ச்சி என்பதில் பத்து இறுதி வர்த்தக நாமங்களான - Gileemalee Retreat, Summer Explorers Pvt Ltd, Eco Grip, The Travel Concierge, Rediscover Sri Lanka, Detroves Travel, Nandana Tea factory, Eco Team - Sri Lanka Pvt Ltd, Infinity Vacations and Jungle Beach Camp – Ahungalla போன்றன பங்கேற்றிருந்தன. இந்த வர்த்தக நாமங்களுக்கு வளர்ந்து வரும் சர்வதேச பிரயாண சந்தைகளுக்கமைய, டிஜிட்டல் பகுதிகளை பயன்படுத்தி தமது செயற்பாடுகள், நிலைபேறான நடவடிக்கைகள், வியாபார வினைத்திறன், செயற்பாடுகள் மற்றும் சேவைகள் போன்றவற்றை மேம்படுத்திக் கொள்வதற்கு பெறுமதி வாய்ந்த வாய்ப்பு கிடைத்திருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .